பொதுவாக காங்கிரஸ் வெல்வது நாட்டிற்கொன்றும் அவ்வளவு நல்ல செய்தியெல்லாம் இல்லை!

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் யார் கை ஓங்கினாலும், அது அப்படியே MP தேர்தலிலும் எதிரொலிக்கும் எனச் சொல்லிவிட முடியாதென்பதே நம் கருத்து. ஆனால் indicator ஆக எடுத்துக் கொள்ளலாம். அவ்ளோ தான். 

ராஜஸ்தான் பொதுவா பிஜேபி காங்கிரஸ் மாறி மாறித்தான் வருகிறது கடந்த 20-25 வருடங்களாகவே. தற்போதைய காங்கிரஸின் அஷோக் கெலாட் ஆட்சி, மீண்டும் காங்கிரஸே என்கிற நிலைக்குக் கொண்டு செல்வாரா எனத் தெரியவில்லை. 
ஆனால் நிறைய நல்ல விசயங்களை செய்திருப்பதுவும், சச்சின் பைலட்டை ராகுல் smooth ஆக handle செய்த விதமெல்லாம் காங்கிரஸுக்கு நல்ல பலம். பிஜேபியும் நல்ல பலத்துடன் சரிக்கு சரியாக மோதியிருக்கிறது. மீண்டும் காங்.ஜெயிக்குமென்றே தோன்றுகிறது. பார்ப்போம். 

மத்தியபிரதேஷம் போனமுறை காங்கிரசே அதிக எண்ணிக்கையில் ஜெயித்தது. சிந்தியாவைத் தூக்கி ஆட்சியைக் கவிழ்த்து அதற்கப்பறம் தேர்தல் என ஜனநாயகப் படுகொலைகளையெல்லாம் சர்வ சாதாரணமாக நிகழ்த்தியது பிஜேபி. இந்த முறையும் கூட கடும் போட்டியே நிலவுகிறது. பிஜேபி ஜெயிக்குமென்றே நானினைக்கிறேன். 

சட்டீஸ்கர் கிட்ட கிட்ட வந்தாலும் காங்கிரஸ் வெல்லும். 

தெலுங்கானாவில், கர்நாடக போலவே, காங்கிரஸ் sweep செய்யுமெனத் தெரிகிறது. தெலுங்கானாவில் மாநிலக் கட்சி BRS தோற்பதைப் பொதுவா நான் விரும்பவில்லை. ஆனால் அதுதான் நடக்கும் போல. 

மிஷோரம் க்கு, பிரதமர் பிரச்சாரமே செய்யவில்லை. பார்ப்போம் அம்மாநிலக் கட்சியின் உழைப்பின் பயனை. 

எங்கெங்கெல்லாம் தேசியக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவை ஆதிக்கம் செலுத்துகிறதோ, அங்கெல்லாம் வலுவான மாநிலக் கட்சிகளின் தேவை இன்றைக்கும் இருக்கிறது. 

பொதுவாக காங்கிரஸ் வெல்வது நாட்டிற்கொன்றும் அவ்வளவு நல்ல செய்தியெல்லாம் இல்லை. மாநிலக் கட்சிகளை அழிக்க நினைக்கும் பிஜேபியின் செயலுக்கு அச்சாரமிட்டதே காங்கிரஸ் தான். 

ஆனால் காங்கிரஸை எல்லாம் மக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவையை உருவாக்கி வைத்திருக்கிறது பிஜேபியும், மாநிலக் கட்சியான BRS ம். 

ராஜஸ்தான், ம.பி, தெலுங்கானா - இம்மூன்றிலும் ஒருவேளை காங்கிரஸ் ஜெயித்துவிட்டால், காங்கிரஸுக்கு நிச்சயமாக கொம்பு மொளைச்சிக்கும். திமுகவிடம் 10 சீட்டுக்கு குறைவாகவெல்லாம் வாங்கவே வாங்காது. பிரதமர் வேட்பாளர் என்றெல்லாம் பேச ஆரம்பிக்கும். காங்கிரஸ் ஒரு பாஞ்சில்லரை என்பதும் அப்போது தான் இந்தப் புதிய அரசியல் விஞ்ஞானிகளுக்கும் புரியவும் வரும். 

ஒருவேளை, பிஜேபி, ராஜஸ்தான் ம.பி என இரண்டிலும் ஜெயித்துவிட்டால், அண்ணாதிமுக உள்ளிட்ட சில மாநிலக் கட்சிகள் மீது சில ரெய்டை நடத்தி மிரட்டிப் பார்க்கும். 

ஆக மொத்தத்தில் பிஜேபி-காங்கிரஸ் என்பது ஒரே கொள்கை கொண்ட இருவேறு கட்சிகள். காங்கிரஸ் போட்ட ரோட்டில் தான் பிஜேபி கடந்த 10 வருடமாகப் பயணம் செய்தது. பிஜேபி போட்ட ரோட்டில் தான் காங்கிரஸுமே பயணப்படும். 

ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு 12 மணிக்குலாம் தெளிவா தெரிஞ்சிடும். 

ஐந்து மாநிலத்தின் தேர்தல் முடிவு எப்படி வந்தாலும் அண்ணாதிமுகவிற்கு சில பல அரசியல் செய்திகள் கிடைக்கும். முடிவு வரட்டும் எழுதுவோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?