அதிமுக ஆட்சியில் மகளிருக்கு நிறைவேற்றப்பட்ட மிக முக்கிய சாதனைகள்..!
சொல்லில் மட்டுமல்லாமல் செயல்களிலும் அத்தியாயம் படைப்பது அதிமுக🌱
அதிமுக ஆட்சியில் மகளிருக்கு நிறைவேற்றப்பட்ட மிக முக்கிய சாதனைகள்;
1.தொட்டில் குழந்தை திட்டம் தந்து மகளிர் குலம் காத்தது அம்மாவின் அரசு!
2.மகளிருக்கு 69% இடஒதுக்கீட்டிற்கு முதன்முறையாக குரல்கொடுத்த கட்சி!
3.உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது
4.பட்டம் அல்லது பட்டய படிப்பு படித்தவர்களுக்கு ₹50,000 நிதியுதவி
5. திருமண நிதியுதவியாக ₹50,000 நிதியுடன், தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் திருமண சீர்வரிசை தொகுப்பு வழங்கியது.!
6.கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் தரமான மருத்துவ வசதிகளை வழங்கியதுடன் சமுதாய வளைக்காப்பு விழா நடத்தி நிதியுதவியும் வழங்கியது.!
7.மகப்பேறு காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு குழந்தைகள் நல பரிசுப்பெட்டகம் மற்றும் இணைஊட்டச்சத்து சத்துணவு மாவு வழங்கியது.
8.பெண்களின் பாதுக்காப்பினை உறுதிப்படுத்தும் வகையில் "அம்மா பட்ரோல் திட்டம்" செயல்படுத்தப்பட்டது.!
9.மகளிர் மேலும் உயர்ந்திட "அனைத்து மகளிர் காவல்நிலையம்" உருவாக்கியது.!
10.மகளிர் தன் சொந்த உழைப்பினை போற்றுவகையில் "மகளிர் சுய உதவிக்குழுக்கள்" அமைத்து சுயதொழில் செய்ய கடனுதவி வழங்கியது.!
11.மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் "கைவினைப்பொருட்கள் விற்பனை செய்யும் வசதி.!
12.கைவினைபொருள் தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி.!
13.மகளிரின் வீரத்தினை போற்றும் வகையில் வீரதீர செயல்புரிந்தமைக்கான "கல்பனாசாவ்லா விருது" வழங்கி கவுரவித்தது.!
14. மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம்.!
15.பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள்
16.கிராமப்புற மகளிர் வாழ்வாதாரம் மேம்பட விலையில்லா ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டம்.!
17.பெண்களின் வாழ்வியல் திறனை மேம்படுத்தும் வகையில் "அவ்வையார் விருது" ஆண்டுதோறும் மகளிர் தினவிழாவில் வழங்கி சிறப்பித்தது.!
18. பெண்குழந்தைகளின் தற்காப்பை மேற்படுத்திக்கொள்ள கராத்தே போன்ற தற்காப்பு கலைகள் வகுப்புகள் நடத்தியது.
தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலை மட்டும் நடத்தி விட்டு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள முயல்கிறது இந்த வெட்கமில்லா திமுக. 2016ஆம் "உள்ளாட்சி தேர்தலில் 50% இடஒதுக்கீடு" கொண்டு வந்து சட்டமாக்கி, தொகுதிகள் மறு சீரமைப்பு செய்து 2020இல் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்தி காட்டிய அரசு.
மாநாடு மட்டும் நடத்தி பேசவில்லை.!
"இவை அனைத்தையும் செயலாக்கிய அரசு அம்மாவின் அரசு.!
அண்ணாதிமுக அரசு.!
பெண்கள் வாழ்வை உயரவைக்கும் இடிமின்முரசு.!
அதுவே எம் கழக அரசு.!
கருத்துகள்
கருத்துரையிடுக