தலைவன் எடப்பாடியார் நடப்பதே தடமாகும்
திரு. EPS அவர்களை மிகக் கடுமையாக விமர்சிக்கும், சசி தினா ஓபி மற்றும் பிஜேபி ஆதரவாளர்களைப் பாருங்கள்,
▪டெல்லிகிட்ட சொல்லி இரட்டை இலையை முடக்கிடுவோம், அப்பறம் எப்படி உங்க எடப்பாடி செயிப்பாருன்னு நாங்களும் பார்க்கிறோம்
▪திமுக கூட சேர்ந்து, கொடநாடு கொலைக்கேசுல உள்ள உள்ள தள்றோமா இல்லியான்னு பாரு
▪CBI ED ய வச்சி ஊழல் வழக்குல உள்ள தள்ளிடுவோம் ஜாக்கிரதை
▪தேர்தல் ஆணையத்துகிட்ட ஒரு வார்த்தை பேசினா போதும், உங்க எடப்பாடி ஆட்டம் க்ளோஸ்
▪சுப்ரீம் கோர்ட்ல தான் இன்னும் கேஸூ இருக்கு தெரியும் ல? தீர்ப்ப மாத்தி எழுதச் சொன்னா எடப்பாடியோட சோலி முடிஞ் தம்பி
நிற்க
மேற்சொன்ன கும்பல், மேற்சொன்ன காரணிகளை வைத்து எடப்பாடியாரை கார்னர் செய்துவிடுவோம் என்று மிரட்டிப் பார்க்கிறார்களே தவிர,
ஒருவர் கூட, ஒரே ஒருத்தர் கூட,
▪எடப்பாடியார்கிட்ட இருக்கிற தொண்டர்களை இழுத்து, எடப்பாடியாரைத் தோற்கடித்து விடுவோம்
▪எடப்பாடியார்கிட்ட இருக்கிற நிர்வாகிகளை எங்கள் பக்கம் மாற்றி, எடப்பாடியாரைத் தோற்கடிப்போம்
▪எடப்பாடியாரை விட அதிகமாக உழைத்து வியூகமமைத்து அவரை வென்று காட்டுவோம்
▪எடப்பாடியார் க்கு இருக்கும் செல்வாக்கைக் காட்டிலும் தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் பொதுமக்களிடமும் அதிக செல்வாக்கைப் பெற்று களத்தில் அவரை வென்று காட்டுவோம் என்று,
சொல்லவே இல்லை.
ஒரு ஆள், ஒர்ரே ஒரு ஆள் இப்படி சொல்லவில்லை அல்லது சொல்ல முடியவில்லை.
ஏனென்றால் எடப்பாடியார்க்கு தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் பொதுமக்களிடமும் இருக்கும் செல்வாக்கைத் தொடக் கூட முடியாது என்று மேற்சொன்ன கும்பலுக்கு நல்லாவே தெரியும்.
தலையில்லா முண்டம் எனச் சொன்னவனின் தலை, அரசியல் போர்க்களத்தில் அடிபட்டு, அநாதையாய்க் கிடக்க வைக்க, அண்ணாதிமுக தொண்டன் தயாராகிவிட்டான்
எடப்பாடியாரை எவன் தொட நினைத்தாலும், அவனுக்கு, அரசியல் எமனாக நிற்க,அண்ணாதிமுக தொண்டன் தயாராகிவிட்டான்
எதிரிகளையும் துரோகிகளையும் உதிரிகளாக்கி அரசியல் களத்தில் ஓடவிட்டே பழக்கப்பட்டுப் போனவன் அண்ணாதிமுக தொண்டன்
கழகத்தை சீண்டுவது காவியோ பாவியோ, வாலாட்டினால் வாளால் வாலை வெட்டியெறிந்துவிட்டு போய்க்கொண்டே இருப்பான் அண்ணாதிமுக தொண்டன் கழகத்தை 31 ஆண்டுகள் ஆட்சிப்பீடத்தில் அமர்த்திய அசகாய சூரனவன்
கழகத்தை 50 ஆண்டுகளாய் விசுவாசத்தோடு, விடாப்பிடியாக கட்டிகாத்து, விஷக் களைகளை வெட்டியெறிந்தே, பழக்கப்பட்டவனவன்
சிக்கிவிடாதீர்கள். தப்பிப் பிழைத்துக் கொள்ளுங்கள். தலைவன் எடப்பாடியார் நடப்பதே
தடமாகும்
தடம்மாறா உழைப்பே வெற்றி வசிக்கும்
இடமாகும்
-புரட்சித்தலைவியின் பக்தன்
தனாகுட்டி
கருத்துகள்
கருத்துரையிடுக