அண்ணாதிமுகவிற்கு நீ தான் மச்சி பிரசாந்த் கிஷோர்😍😍

அண்ணாதிமுகவிற்கு நீ தான் மச்சி பிரசாந்த் கிஷோர்😍😍

ரத்தத்தின் ரத்தங்களே,

உங்கள் Booth-ல் 51% ஓட்டை வாங்கிக் காட்டுங்கள். அவ்ளோ தான் இலக்கு. எளிதான மற்றும் வலிமையான இலக்கு.

ஒன்றியம் ஒத்துழைக்கல, மாவட்டம் அதப் பண்ணல இதப் பண்ணல ங்கிற பல்லவி எல்லாம் வேணாம். 

உங்க பூத் voter listல, நம்ம கட்சிகாரங்க எத்தனை பேரு, திமுக காரன் எத்தனை பேரு, மற்றக் கட்சியில் இருப்பவன் யார் யார் என லிஸ்ட் எடுங்க. 

மீதி எவ்ளோ பேர் எந்தக் கட்சியிலும் இல்லை என்பதையும், அவர்களிடம் நம் கட்சி மீதான நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் விதமாகவும் என்னென்ன செய்ய முடியுமெனப் பார்த்து யோசித்து அதைச் செய்யுங்கள். 

வெளியூர் ல இருக்கிற, நம்மக் கட்சி காரன் ஓட்டுப் போட வந்துருவானா அல்லது எதும் உதவி தேவைப்படுதான்னுப் பாருங்க. அதை சரி பண்ணுங்க.

18-30 வயசு தம்பி தங்கைகளிடம் மென்மையாக விவாதம் செய்யுங்கள். இதுவரை அதிமுக என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதையும், அடிப்படைக் கொள்கைகளையும், அண்ணாதிமுகவிற்கு அவர்கள் ஏன் வாகளிக்க வேண்டுமென்பதையும் பொறுமையாக எடுத்துரையுங்கள். 

எடப்பாடியார் எதிர்கொண்ட சவால்களையும், அவர் செய்த மக்கள் நலத் திட்டங்களையும் போறப்போக்குல ஜாலியா பேசி வையுங்கள்
நீங்கள் தான் அந்த பூத் க்கு 'அதிமுக முகம்' என்பதால், முடிந்தவரை எந்தக் கெட்ட பழக்கமுமில்லாமல் இருங்கள். குறைந்த பட்சம், சிகரெட் மது போன்றவற்றை பொதுவில் consume பண்ணாதீர்கள். கெட்ட வார்த்தைப் பேசுவதைத் தவிர்த்து விடுங்கள். 

சாதி மத உணர்வுகளை உங்கள் வீட்டின் பழைய இரும்புப் பெட்டிக்குள் போட்டு நன்றாக நாலு பூட்டுப் போட்டு அடைத்து விடுங்கள்.

அன்ணாதிமுக என்கிற கட்சி தான் 'நம் அடையாளம்'. அண்ணாதிமுக செய்த மக்கள் நலப் பணிகள் தான் நம் சொத்து. 

கட்சியைப் பலவீனப்படுத்தும் எந்தச் செயலையும் எக்காரணம் கொண்டும் செய்யாதீர்கள். 

உங்களை வைத்துத் தான் உங்க ஊர்க்காரன் அண்ணாதிமுக எப்படிப்பட்டக் கட்சி, அண்ணாதிமுகவினர் எப்படிப்பட்டவர்கள் எனக் கணிப்பான் என்பதை எப்போதும் நினைவிற்கொள்ளுங்கள். 

அண்ணாதிமுகவிற்கு நீ தான் மச்சி பிரசாந்த் கிஷோர்😍😍

ஆரம்பிக்கலாமா..? 🔥🔥🔥

#Mission51Percent 

Go ahead man 🔥🔥🔥

Share if you are agreed with this

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜயின் அரசியல் பிடித்து விஜய்க்கு வாக்களிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால் நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்க மாட்டேன், ஆனால் நீங்கள் அப்படியில்லையே!

Ministers of MGR's Assembly: Rare Pics