ஆதரவு கொடுத்தும் கேட்கத்தான் யாருமில்லை!!!
ஈரோடு இடைத்தேர்தலும், அரசியல் தற்குறி அண்ணாமலை expose ஆனவிதமும் - ஒரு பார்வை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அண்ணாமலை, தானே அங்கு போட்டியிட விரும்பினார்.
அதிமுக திமுகவுக்கு இணையாக பிஜேபி வளர்ந்துவிட்டது என கூசாமல் கொக்கரித்த அண்ணாமலை, 5% ஓட்டைக் கூட அங்கு வாங்கிக் காண்பிக்க முடியாது என்ற கள 'உண்மை' தெரிந்துவிட்டதால் பின்வாங்கினார்
சரி அடுத்து, அதிமுகவை ஆட்டங்கட்ட அண்ணாமலை செய்த பகீரதபிரயத்தனங்கள் பல. அவற்றுள் சில...
ஓடிச்சென்று வாசன் அவர்களை கிட்டதட்ட மிரட்டி, தாமரை சின்னத்தில் யுவராஜை நிறுத்துங்கள் என்றார். முடியவில்லை.
பிப் 1 பிஜேபியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றார். நிறைய பிஜேபியினர் இடைத்தேர்தலில் போட்டியிட வலியுறுத்துகின்றனர் என்றார்.
நாராயணன் திருப்பதியை விட்டு, நாங்கள் போட்டியிடக் கூட வாய்ப்பிருக்கிறது, அதிமுக காத்திருந்தால் காத்திருக்கட்டும் என்று திமிராக வேண்டுமென்றே பேச வைத்தார்.
தொகுதிக்கு 100 ஓட்டு கூட இல்லாத இந்த ஏசி சண்முகம், பச்சமுத்து மற்றும் ஜான்பாண்டியனை வைத்து, அதிமுகவை லாம் நாங்க மதிக்கல, பிஜேபி சொன்னா நாங்க ஒத்துக்குவோம்ன்னு அறிக்கைவிடச் செய்து, அதிமுகவை கீழ்மைப்படுத்தி அற்பச் சந்தோஷமடைந்தார் அண்ணாமலை.
அதிமுகவில் 4% ஆதரவு கூட இல்லாத OPS ஐலாம், எடப்பாடியாருக்கு இணையான தலைவராக தனது War Room வானரங்களை விட்டு பிம்பப்படுத்தி, EPS தலைமையிலான அதிமுகவை சீண்டினார் அண்ணாமலை
இறுதியாக,
OPS - EPS இணைய வேண்டும், அப்படி இணைந்தால் தான் திமுக என்ற கட்சியை எதிர்க்க வலுகிடைக்கும் என்றும், 1999-2004 வரை கூட்டணியில் கொஞ்சிக்குலாவிக் கிடந்த திமுகவை,
தீயசக்தி என்று எம்ஜிஆர் சொன்னதாகவும் அதை ஞாபகப்படுத்துவதாகவும், 1972 லிருந்தே திமுகவை எதிர்த்தே அரசியல் புரிந்த அண்ணாதிமுகவினருக்கு பாடம் எடுத்தார் அண்ணாமலை.
அதாவுது, அண்ணாமலை பிறப்பதற்கு முன்பிருந்தே திமுகவை எதிர்த்து ஆட்சியைப் பிடித்த அண்ணாதிமுக காரனுக்கு,
அதிலும் 50 ஆண்டுகால அரசியல் ஜாம்பவான் அண்ணன் எடப்பாடியாருக்கு, இந்த 'குறுக்குவழி' குப்புசாமி மகன் அரசியல் சொல்லித் தருவதாக பிம்படுத்தினார்.
அதிமுகவை பலவீனப்படுத்த, அதிமுக என்ற கட்சியின் நற்பெயரை எப்படியாவுது வீழ்த்திவிட, தான் கற்றுக்கொண்ட சங்கிவித்தை மொத்தத்தையும் களமிறக்கினார் அண்ணாமலை
ராமாவரம் தோட்டத்திலும், போயஸ் தோட்டத்திலும், வித்தை கற்ற எங்கள் வியூகச் சக்கரவர்த்தி எடப்பாடியாரின் கெண்டைக்கால் முடியைக் கூடத் தொட முடியாமல் தோல்வி அடைந்தார் அண்ணாமலை.
தேர்தல் ஆணையம் வரை முயன்றார் அண்ணாமலை. முழுத்தோல்வி.
SC தீர்ப்பு அண்ணாமலை குழு (BJP, OPS, TTV, ACS and etc..) துளியும் எதிர்பார்க்கவில்லை.
அதன் பிறகு அடித்தார் பாருங்கள் அந்தர்பல்டி.
NDA கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற முழுவீச்சில் உழைப்போம் என்றிருக்கிறார்.
அண்ணாதிமுகவின் தேர்தல் பணிமனை பேனரில் கூட்டணிக் கட்சிகள் தலைவர்கள் படத்தில் இந்த நிமிடம் வரை பிஜேபி பெயருமில்லை, யார் படமுமில்லை.
அண்ணாதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றி வேட்பாளர் என்றே இப்போதுவரை இருக்கிறது
மொத்த துரோகச் செயல்பாட்டிலும் ஈடுபட்டு முழுதாய் மூக்குடைந்த அண்ணாமலையும் அவரது அதிகாரத்திற்கு அடிபணிந்து அவரோடு சென்ற அற்பப்பதர்களும் நடுத்தெருவில் நின்று கொண்டு கூவுகிறார்கள், அண்ணாதிமுகவிற்கே ஆதரவு என்று..
ஆனால் கேட்கத்தான் யாருமில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக