நீட் தேர்வும் உண்மையும் பொய்யும் : நடுநிலையாளர்

நீட் தேர்வும், உண்மையும், பொய்யும்., 👇

யாருக்கு வேண்டுமானாலும் வாக்களித்து கொள்ளுங்கள்., அது உங்கள் உரிமை.,

ஆனால் பொய்யான வாக்குறுதி அளிப்பவர்களுக்கு ஒரு போதும் வாக்களிக்காதீர்கள்.,

நீட் தேர்வை, நீக்கவே முடியாதா என்றால் நிச்சயம் முடியும் தான், மக்களவை & மாநிலங்களவையில் நீட் ரத்து செய்வதற்கான சட்ட வரைவு கொண்டுவந்து அதை பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி, அதை உச்ச நீதிமன்றம் & குடியரசு தலைவரின் சம்மதத்தோடு நீக்குவதற்க்கானதுதான் தற்போது இருக்கும் ஒரே வழி.,

தற்போது உள்ள சூழ்நிலையில் இதை செய்ய மத்திய ஆளும் கட்சியான பிஜேபியால் மட்டுமே முடியும்., நீட் வேண்டும் என்ற முடிவில் இருக்கும் பிஜேபி இதை செய்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவே.,

மாநில கட்சியான திமுகவால் இது சாத்தியமா என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.,

ரெண்டாவது., 

நாளை , ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் கட்சி நீட்டை ரத்து செய்துவிடுமா என்றாலும் 100 க்கு 99 சதவிகிதம் வாய்ப்பு கம்மிதான், ஏனென்றால் இந்தியாவில் நீட் தேர்வு அவசியம் என சொல்லி அதை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து அதை சட்டமாக்கியதே காங்கிரஸ் கட்சிதான், அப்போது அதற்க்கு ஆதரவாக இருந்ததும் இதே திமுக தான்.., மேலும் தமிழகத்தை தவிர்த்து இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி & பலமாக இருக்க கூடிய கூடிய எல்லா மாநிலங்களும் நீட் வேண்டும் என்ற முடிவில் இருக்கும்பொழுது, நாளை ஒருவேளை காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கே வந்தாலும் மற்ற மாநிலங்கள் கடுமையாக இதை எதிர்க்கும்., சோ காங்கிரஸ் இதை செய்வதற்கான வாய்ப்பும் மிக மிக குறைவே,

எதார்த்தமான உண்மை இவ்வாறு இருக்க எதன் அடிப்படையில் திமுக, நாங்கள், நீட்டை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்தது இனியும் கொடுக்கிறது என தெரியவில்லை..,

ராகுல் காந்தியை விடுங்க, தமிழகத்துல இருக்குற காங்கிரஸ் கட்சி ஆளுங்களை நீட்டை ரத்து செய்வோம் சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்?? 

நீட் விஷயத்தில் அதிமுக ஆதரிச்சதா? இல்லையா என்பது ஊரறிந்த விஷயம்., நீட் விவகாரத்தில் அதிமுக , உச்ச நீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தியது தானே தவிர பாராளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ நீதி மன்றத்திலோ நீட் வேண்டும் என்று எங்கும் வாதாடவில்லை,

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்பது அரசியல் சாசன கடமை, அதிமுக அதைத்தான் செய்தது., அதற்க்கு பிறகு உச்ச நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வழக்கும் தொடர்ந்தது, அந்த வழக்கு இன்றும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருக்கிறது., அதற்கான வழக்கு விசாரணை செலவுகள் கூட அதிமுக என்ற கட்சியின் பணத்தில் தான் செய்யப்படுகிறது., இதுதான் உண்மை., 

இறுதி தீர்ப்பு வழக்கில் நீட்டுக்கு ஆதரவாக வாதாடிய திருமதி.நளினி அவர்களிடம் கேட்டுப்பாருங்கள் அந்த நேரத்தில் இருந்த அதிமுக அரசு நீட் வேண்டும் என வாதாடியதா? இல்லை, நீட் வேண்டாமென வாதாடியாதா என்பதை அவர் சொல்லுவார்,, உச்ச நீதி மன்ற இறுதி தீர்ப்பை எடுத்து பார்த்தால் நீட் விவகாரத்தில் மத்திய அரசை எதிர்த்து வாதாடியது யார் ? அதில் அதிமுகவின் நிலைப்பாடு என்னவென்று தெரியும்..,
அதும்போக அதிமுக ஆட்சிகாலத்தில சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி அதை கவர்னர் ஆதரவோடு ( முன்பு இருந்த கவர்னர் ) குடியரசு தலைவர் மாளிகை வரை கொண்டு சென்றது அதிமுக மட்டுமே, 

அது மட்டுமில்லாமல் அரசு பள்ளி யில் பயிலும் ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 7.5% இட ஒதுக்கீட்டை கொண்டுவந்து அதை அங்கீகரிக்காமல் இருந்த ஆளுநரையும் மீறி சிறப்பு சட்டம் கொண்டுவந்து ஆண்டுக்கு 400 க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஏழை மாணவர்களின் கனவை உறுதி செய்தது அன்றைய அதிமுக அரசு., இந்த விகிதம் நீட்க்கு முன்பு இருந்த அரசு பள்ளி மருத்துவ மாணவர்களின் விகிதத்தை விட பல மடங்கு உயர்வு என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை., 

அப்போது இந்த 7.5 சதவிகிதத்தை 10 % விகிதமாக உயர்த்த வேண்டும் என சொன்ன திமுக இதோ ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகியும் அதைக்கூட செய்யவில்லை., 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட்டை ரத்து செய்துவிடுவோம் என்று பொய்யான வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்த திமுக, ஆட்சிக்கு வந்து வுடன் அதிமுக இயற்றிய தீர்மானத்தை தேதி மற்றும் முதலமைச்சர் கையெழுத்தை மட்டும் மாற்றி போட்டு கிண்டி கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைத்தது ., அந்த தீர்மானம் இன்னும் கிண்டியை கூட தாண்டவில்லை என்பது வேற கதை.,

ஆட்சிக்கு வந்து தீர்மானம் தவிர வேற எதையும் செய்யாத & செய்ய முடியாத திமுக இன்னும் நாங்கள் நீட்டை ரத்து செய்வோம் என உளறுவதெல்லாம் வாக்கு அரசியலுக்கானது மட்டுமே.,

நீட்டுக்கான வழக்கில் கூட இறுதிவரை வாதாடி இந்தியாவிற்கு நீட்டை அமல்படுத்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரத்தின் மனைவி திருமதி.நளினி அவர்களை கேட்டால் தெரிந்துவிடும் நீட் ரத்து செய்ய முடியுமா?முடியாதா என்று.,

ஒருவேளை, நாளை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து நீட் தேர்வை நாங்கள் ரத்து செய்கிறோம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தால் திருமதி.நளினி அவர்கள் தான் அதை எதிர்த்து வாதாடுவார், வாதாட மாட்டேன் என திருமதி.நளினி அவர்களை சொல்ல சொல்லுங்களேன் பார்க்கலாம்.,

மக்களே & மாணவர்களே பொய்யான வாக்குறுதிகளை நம்பி உங்கள் உயிரை மாய்துகொள்ளாதீர்கள்., முடிந்தால் முட்டி மோதி முயற்சி செய்து வெற்றி பெறுங்கள்., இல்லையேல் சாதிக்க கூடிய எத்தனையோ படிப்புகள் இருக்கிறது., உங்கள் உயிரைவிட மருத்துவ படிப்பு ஒன்றும் அவ்வளவு உயர்ந்தல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து.,

நன்றி : பரமகுரு போஸ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?