திமுகவின் மூலதனமே பொய் தான், பொய் மட்டும் தான்!!!

திமுக சார்பில் தொலைகாட்சி விவாதங்களில் பேசும் வக்கீல் சரவணன் அண்ணாதுரை என்பவர் போகிற போக்கில், தமிழ்நாட்டில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது கருணாநிதி தான் என்று பதிவிட்டிருக்கிறார்.

அண்ணாதிமுகவின் அடிமட்ட தொண்டனான நான், இதை பார்த்ததும் அதிர்ச்சியடையவில்லை. 
பித்தலாட்டம் செய்வதற்கென்றே பிறப்பெடுத்த, பித்தலாட்டத்தின் பிதாமகன், திரு கருணாநிதி அவர்களின் வழியில் வந்தவர்கள், பித்தலாட்டம் செய்யாமலிருந்தால் தான், அதிர்ச்சியடைய வேண்டும் என்ற அடிப்படைத் தத்துவத்தை அறிந்தவன் நான்.

சரி, விஷயத்திற்கு வருவோம். 

69% இட ஒதுக்கீடு கொண்டுவந்தது யார்..? அதன் வரலாறு தான் என்ன..? தரவுகளை நான் தருகிறேன். பிறகு நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

1950 அரசியலமைப்புச் சட்டம் 41% இட ஒதுக்கீட்டைத் தந்தது. 

பிற்படுத்தப்பட்டோருக்கு OBC - 25%
பட்டியல் இனத்தவருக்கு SC - 16%

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டு உருவான அன்றைய திமுக அரசால், 1971-76 திமுக ஆட்சிக் காலத்தில் 8% உயர்த்தப்பட்டு, 41% என்பது 49% ஆக மாறுகிறது இட ஒதுக்கீடு. 

அதாவுது, 
OBC - 25% + 6% = 31%,
SC - 16% + 2% = 18% 

இது மட்டும் தான், 69% இட ஒதுக்கீட்டில், கருணாநிதியின் ஒட்டுமொத்த பங்கே. 

அதன்பிறகு,

திமுகவிலிருந்து பிரிந்த புரட்சித்தலைவர், அண்ணாதிமுகவை உருவாக்கி, தேர்தலில் வென்று, முதலமைச்சராக ஆன பிறகு,1980-84 ஆட்சிக் காலத்தில்,

புரட்சித்தலைவர் அவர்கள் தான் ஒரே கையெழுத்தில் 19% இட ஒதுக்கீட்டை உயர்த்தி, 

அதாவுது, 49% to 68% ஆக உயர்த்தினார். 

அதாவுது, ஒரே கையெழுத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தின் தலையெழுத்தையும் மாற்றிய அந்த ''அரச கட்டளையை'' GO வை இட்டவர்,

எங்கள் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான். அண்ணாதிமுக என்கிற கட்சி தான். 😍

அதாவுது, 

OBC - 31% + 19% = 50%,
SC - 18%  

மொத்தம் 68%😍

அந்த 1% ST மக்களுக்காக கோர்ட் உத்திரவின் பேரில் இந்தியா முழுக்க வந்தது. தமிழ்நாட்டிலும் 68% + 1% = 69% என்றானது. 

இது தான் மொத்த வரலாறு. ♥

வெறும் 8% மட்டும் கொடுத்துவிட்டு, மொத்த 69% இட ஒதுக்கீட்டையுமே கொண்டுவந்தது கருணாநிதி தான் என்பது பச்சை அயோக்கியத்தனமல்லவா..?😡 பக்கா கருணாநிதித்தனமில்லையா? 😝

அதன் பிறகு, மொத்த OBC யினருக்கும் 50% என்றிருந்ததை, BC + MBC - 30% + 20% என்றும்,

அந்த BC 30% க்குள், முஸ்லீம்க்கு உள் ஒதுக்கீடு, SC பிரிவில் 18% என்றிருந்ததை, அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு என்று தான் பிரித்தாரே தவிர, 

(அதிலயும் கிருத்துவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்து அதை அவர்கள் இந்த ஆணியே எங்களுக்குத் தேவையில்லை என்று திருப்பிக்கொடுத்த கதை எல்லாம் உண்டு)

69% கொண்டுவந்தது கருணாநிதி அல்ல. கருணாநிதி அல்ல. கருணாநிதி அல்ல.🔥

8% கொண்டுவந்த கருணாநிதி பெரிய சமூகநீதி தலைவரா..?🤨

19% கொண்டுவந்த புரட்சித்தலைவர் பெரிய சமூகநீதி தலைவரா..?😍

சமூகநீதி என்றாலே அது அண்ணாதிமுக தான். அண்ணாதிமுக மட்டும் தான். 😍

பெண்களுக்கு 50% உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு, மருத்துவப்படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீடு, விளையாட்டு வீரர்களுக்கு 2% லிருந்து 3% இட ஒதுக்கீடு கொடுத்தது என, 

தமிழ்நாட்டில் இன்றிருக்கும் மொத்த சமூகநீதியுமே, அண்ணாதிமுகவால் தான் கொண்டுவரப்பட்டது. 😍

சரி 69% இட ஒதுக்கீட்டில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பங்கென்ன...? மண்டல் கமிஷன் அறிக்கை என்ன..? அதில், காலத்தால் அழிக்க முடியாத அசிங்க செயலை செய்த கருணாநிதியின் அயோக்கியத்தனங்கள் என்னென்ன..? 

infact, திரு. கருணாநிதி அவர்கள் 69% இடஒதுக்கீட்டின் எதிரி என ஏன் சொல்கிறேன்..? 

69% இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று, அன்றைக்கு கருணாநிதி செய்த அரசியல் சித்துவிளையாட்டுக்கள் என்னென்ன, அழிச்சாட்டியங்கள் என்னென்ன, தி.க தலைவர் கி. வீரமணி அவர்களின் கருணாநிதி மீதான, மிகக் கடுமையான விமர்சனங்கள் என்னென்ன,

புரட்சித்தலைவி அவர்கள், சமூக நீதி காத்த வீராங்கனையானது எப்படி என்பதையெல்லாம் ஒவ்வொன்றாக விரிவாக பதிகிறேன்.😍

Stay Tuned Brothers & Sisters

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?