23 ஜூன் அன்றே பொதுச் செயலாளர் ஆகியிருப்பார் மாண்புமிகு எடப்பாடி கே பழனிசாமி!!!!

பொதுக்குழுவில் 23 தீர்மானம் தான் நிறைவேற்ற வேண்டும் என்று வரம்புமீரிய ( உச்சநீதிமன்றம் சொன்ன வார்த்தை இது) தீர்ப்பால் அதுவும் இரவு முழுவதும் விசாரித்து பகல் 4:30 மணிக்கு வழங்கிய (சாமானியன் தவறே செய்யாதவன் நிரபராதி என தீர்ப்பு வழங்கவே 10 நாள் வரை எடுத்துக் கொள்ளும் நீதிமன்றம் என்பதையும் நினைவில் கொண்டு) தீர்ப்பால் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் ஆகியிருக்க வேண்டியர் மீண்டும் நீதிமன்ற தீர்புக்கு காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

நீதிமான்கள் கடவுளுக்கு சமம் என்பது தனிமனிதனின் ஆசைக்கு, அரசியல் அழுத்தங்களுக்கு, அதிகாரவர்கங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கவேண்டும் என்பதற்கு தானே தவிர அவர்களின் இத்தகைய வரம்புமீரிய தீர்புகளுக்கு இல்லை.

ஒரு வேளை ஜூன் மாதம் 23 ஆம் தேதி அதிகாலையில் இந்த தீர்ப்பு உச்சநீதின்றத்தில் கூறிய போல வரம்புமீரிய தீர்ப்பு கொடுக்காமல் இருந்திருந்தால் மாண்புமிகு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கடந்த பொதுக்குழுவிலேயே பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பார். தற்போது வரை எவ்வளவு அரசியல் அழுத்தங்கள் கடந்த 14-15 நாட்களாக இவை அனைத்தும் ஒரு தவறான தீர்ப்பால் தானே. இதை கேள்வி கேட்க ஆட்கள் இல்லை என்பதே இப்படிபட்ட வரம்புமீரிய தீர்ப்புகள் கொடுக்க முக்கிய காரணம். நீதிகள் நிதியால் தீர்மானிக்கும் அளவுக்கு கேவலமாக சென்று கொண்டு இருப்பது இன்னொரு வேதனையான கொடுமையான ஒன்று. 
இப்போதாவது நீதி கிடைக்குமா அல்லது அரசியல் அழுத்தத்தின் காரணமாக நீதிகள் வரையறுக்கப்படுமா என்பது எல்லாம் நாளைக்கு (ஜூலை 11 காலை 9 மணிக்கு தீர்ப்பு வரும்போது) தான் தெரியும்.

ஆனால் நீதியை தள்ளிப்போட முடியுமே ஒழிய ஒருநாள் நீதி கட்டாயம் வெல்லும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?