தகுதியானவர் தலைமையேற்பார்அவர் தலைமையில் செயல்படுவோம்...
அன்புள்ள இரட்டை இலைக்காரனுக்கு,
நம் கட்சியை யார் வழிநடத்த வேண்டும் என்பதில் உங்களுக்கும் எங்களுக்கும் வேறுபாடு உள்ளது உண்மை தான்.
நாங்கள் சில விஷயங்களை மனதில் வைத்து அண்ணன் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் நம் பெருமைமிகு அண்ணாதிமுகவை வழிநடத்த வேண்டுமென நினைக்கிறோம். நீங்களும் அவ்வாறு சிலவற்றை மனதிலிருத்தி, திரு. ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வரவேண்டுமென விரும்பலாம்.
யாரோ ஒருவர் நிச்சயமாக ஜெயிப்பர். இருவரில் ஒருவர் நிச்சயமாக தோற்பர். ஆனால் ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படுவதே நிர்வாகத்திற்கு உகந்தது என்பதில் உறுதியாய் அனைத்துத் தொண்டர்களும் இருக்கிறார்கள். இருக்கட்டும். தவறில்லை.
இந்த நிர்வாக ரீதியலான பிரச்சினை ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும் உறுதியாய். அன்றிலிருந்து மீண்டும் திமுகவை நோக்கி நம் இலக்கு பாயட்டும்.
முடிவு ஏற்படும் வரை நாங்களும் நீங்களும், எங்கள் கருத்தும் உங்கள் கருத்தும், மோதிக்கொள்ளட்டும். முடிவான பிறகு ஒருங்கிணைந்தே செயல்படுவோம் கழக இலக்கை நோக்கி.
இதில், நாம் வெற்றி பெற்று விட்டோம் என்கிற திமிரு வெற்றிபெற்ற தரப்புக்கும் தேவையில்லை, நாம் தோற்றுவிட்டோம் என்கிற எண்ணம் தோல்வியுற்ற தரப்புக்கும் தேவையில்லை.
இது வெறும் நிர்வாகச் சிக்கல். இது தற்காலிகமானது. இது விடிந்ததும் மறைந்து விடக்கூடியது.
தொண்டர்களிடம் செல்வாக்கை நிரூபிப்பதே சரியானதே தவிர, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என சுற்றுவது அல்ல.
தகுதியானவர் தலைமையேற்பார்
அவர் தலைமையில் செயல்படுவோம்...
கருத்துகள்
கருத்துரையிடுக