என்ன நடந்தது 25 செப்டம்பர் 2023 அன்று அதிமுக தலைமை அலுவலகம் எம்.ஜி.ஆர் மாளிகையில்...
தமிழ்நாட்டில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வைத்து எடப்பாடி தெளிவுப்படுத்திய நிலையில், அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகியோரை செப். 23-ம் தேதி டெல்லிக்கு அனுப்பிவைத்தார் எடப்பாடி. அவர்களும் அண்ணாமலை குறித்து கருத்தை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் தெளிவுப்படுத்தினார்கள். ஆனால், ஜே.பி.நட்டா அதை காதிலேயே வாங்கிகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் அ.தி.மு.க தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் செப்.25-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுமென்று 24-ம் தேதி காலை அறிவிப்பு வெளியானபோதே, `பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை' என்பதை எடப்பாடி அறிவிக்கப்போகிறாரென்று தகவல் பரவியது. அதன்படி, செப்.25-ம் மதியமே அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூடத்தொடங்கினர். வழக்கத்துக்கு மாறாக கூட்டமும் அலைமோதியது. ஆங்காங்கே அண்ணாமலைக்கு எதிராகவும், பா.ஜ.க-வுக்கு எதிராக கோஷங்களை கேட்ட முடிந்தது. கூட்டத்துக்கு வரும் நிர்வாகிகளின் செல்போன்கள் முகப்பிலேயே பத்திரமாக வாங்கி வைக்கப்பட்டது.
சரியாக 4.15 மணிக்கு தலைமை அலுவலகத்துக்கு வந்த எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 4.25 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டத்தில், முதலில் மைக்கை பிடித்து இருக்கிறார் தலைமை நிலைய செயலாளர் வேலுமணி. "அ.தி.மு.க-வை அவமதிக்கும் விதமாக அண்ணாமலை தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பதை இனியும் சகித்துக் கொள்ளமுடியாது.
அண்ணாமலைதான் பிரச்னை என்பதை டெல்லியில் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இனியும் கூட்டணியில் இருந்தால், நமக்குதான் அவமானம். எனவே பொதுச் செயலாளர் ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும்" என்று அவர் பேச, தொடர்ந்து துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும் பா.ஜ.க குறித்து வசைப்பாடியிருக்கிறார்கள்.
அதேபோல, பெரும்பாலான மா.செ.க்களுக்கும் கூட்டத்தில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இறுதியாக பேசத்தொடங்கிய எடப்பாடி, "எனக்கு முன்னே பேசியவர்கள் கருத்தை நானும் ஏற்கிறேன். கூட்டணி தர்மத்துக்காக தன்மானம், சுயமரியாதை இழந்து அரசியல் செய்யமுடியாது. எனவே, பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை...இல்லை...இல்லை" என்று எடப்பாடி சொன்னதும் நிர்வாகிகள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்யத் தொடங்கினர்.
அதை நாம்தான் முறியடித்து தேர்தல் பணியை செய்யவேண்டும். நம்மிடமிருந்து பிரிந்து சென்ற சிறுபான்மையினர் வாக்கு உள்ளிட்ட அனைத்து வாக்கு வங்கியை நாம் பெற்றாகவேண்டும். வெற்றிக்காக நம் முன்பிருந்த அனைத்து தடைகளையும் நாம் முறியடித்து இருக்கிறோம். இனி வெற்றி மட்டுமே நமது இலக்காக பயணிக்கவேண்டும்" என்று பேசி இருக்கிறார். எடப்பாடி இந்த அறிவிப்பை வெளியிட்டதும், தீர்மானம் வாசிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த சமயத்தில்தான் தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளரான ஆதிராஜாராம், முதல்மாடியின் பால்கணிக்கு வந்து, அவரது ஆதரவாளர்களை நோக்கி, ' வெடியை போடு வெடியை போடு' என்று சொன்னதும், வெளியில் நின்ற தொண்டர்கள் ஆரவாரத்தில் ஈடுப்பட்டனர். அதைத்தொடர்ந்துதான், துணைப் பொது செயலாளர் கே.பி.முனுசாமி பத்திரிகையாளர்களிடம், கூட்டணி முறிவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார்.
கருத்துகள்
கருத்துரையிடுக