இடுகைகள்

தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்யும் அதிமுகவின் லிங்க்

படம்
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்தால் அதிமுக விதிகளின் செய்யும் மாற்றம் அதிமுக பொதுக் குழு தீர்மானம் இடம்பெறும். https://eci.gov.in/files/file/4934-all-india-anna-dravida-munnetra-kazhagam-constitution/ List of AIADMK office bearers uploaded in ECI website link below: https://eci.gov.in/files/file/15120-all-india-anna-dravida-munetra-khazagham/

இடைத்தேர்தல் தோல்வியின் போது கருணாநிதி எழுதிய கடிதம் ஒரு நினைவூட்டல்

படம்
கருணாநிதி எழுதிய கடிதம்: அமைச்சர்கள் தேர்தல் பணிக் குழுவில் இடம் பெற்றதால், அந்தந்த அமைச்சர்களின் கீழ் பணியாற்றும், அரசு அதிகாரிகளை, ஆளுங்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட வைத்தார்கள். ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக அரசின் இலவச உதவிப் பொருள்களான மிக்ஸிகள், கிரைண்டர்கள், மின் விசிறிகள் போன்றவை அந்தத் தொகுதிக்குள் கொண்டு சென்றதை 11/11/2013 தேதிய "தினமலர்" நாளேடே வெளியிட்டிருந்தது. ஏற்காடு தொகுதி தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனச் சோதனை என்ற பெயரில் பொதுமக்க ளின் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அமைச்சர்கள் செல்லும் கிராமச் சாலைகளில் சோதனையிடவே இல்லை. தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், வேட்பு மனு தாக்கல் செய்ய அதிமுக கொடி கட்டிய காரில் வந்தபோது, அமைச்சருக்குப் பாதுகாப்பாக காவல் துறையினர் தேர்தல் விதிமுறைகளை மீறி, தமிழ்நாடு அரசு ஜீப் வாகனத்தைப் பயன்படுத்தினர். அதிமுக வேட்பாளர், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது, நாற்பதுக்கும் மேற்பட்ட அதிமுக கொடி கட்டிய கார்கள் தேர்தல் விதி முறைகளை மீறி வந்தன. 13/11/2013 அன்று பகல் 12 மணியளவில் அனைத்து அமைச்ச...

ஆதரவு கொடுத்தும் கேட்கத்தான் யாருமில்லை!!!

படம்
ஈரோடு இடைத்தேர்தலும், அரசியல் தற்குறி அண்ணாமலை expose ஆனவிதமும் - ஒரு பார்வை  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அண்ணாமலை, தானே அங்கு போட்டியிட விரும்பினார்.  அதிமுக திமுகவுக்கு இணையாக பிஜேபி வளர்ந்துவிட்டது என கூசாமல் கொக்கரித்த அண்ணாமலை, 5% ஓட்டைக் கூட அங்கு வாங்கிக் காண்பிக்க முடியாது என்ற கள 'உண்மை' தெரிந்துவிட்டதால் பின்வாங்கினார் சரி அடுத்து, அதிமுகவை ஆட்டங்கட்ட அண்ணாமலை செய்த பகீரதபிரயத்தனங்கள் பல. அவற்றுள் சில... ஓடிச்சென்று வாசன் அவர்களை கிட்டதட்ட மிரட்டி, தாமரை சின்னத்தில் யுவராஜை நிறுத்துங்கள் என்றார். முடியவில்லை. பிப் 1 பிஜேபியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றார். நிறைய பிஜேபியினர் இடைத்தேர்தலில் போட்டியிட வலியுறுத்துகின்றனர் என்றார்.  நாராயணன் திருப்பதியை விட்டு, நாங்கள் போட்டியிடக் கூட வாய்ப்பிருக்கிறது, அதிமுக காத்திருந்தால் காத்திருக்கட்டும் என்று திமிராக வேண்டுமென்றே பேச வைத்தார்.  தொகுதிக்கு 100 ஓட்டு கூட இல்லாத  இந்த ஏசி சண்முகம், பச்சமுத்து மற்றும்   ஜான்பாண்டியனை வைத்து, அதிமுகவை லாம் நாங்க மதிக்கல, பிஜேபி சொன்னா நாங்க ஒ...

தலைவன் எடப்பாடியார் நடப்பதே தடமாகும்

படம்
திரு. EPS அவர்களை மிகக் கடுமையாக விமர்சிக்கும், சசி தினா ஓபி மற்றும் பிஜேபி ஆதரவாளர்களைப் பாருங்கள், ▪டெல்லிகிட்ட சொல்லி இரட்டை இலையை முடக்கிடுவோம், அப்பறம் எப்படி உங்க எடப்பாடி செயிப்பாருன்னு நாங்களும் பார்க்கிறோம் ▪திமுக கூட சேர்ந்து, கொடநாடு கொலைக்கேசுல உள்ள உள்ள தள்றோமா இல்லியான்னு பாரு ▪CBI ED ய வச்சி ஊழல் வழக்குல உள்ள தள்ளிடுவோம் ஜாக்கிரதை ▪தேர்தல் ஆணையத்துகிட்ட ஒரு வார்த்தை பேசினா போதும், உங்க எடப்பாடி ஆட்டம் க்ளோஸ் ▪சுப்ரீம் கோர்ட்ல தான் இன்னும் கேஸூ இருக்கு தெரியும் ல? தீர்ப்ப மாத்தி எழுதச் சொன்னா எடப்பாடியோட சோலி முடிஞ் தம்பி  நிற்க மேற்சொன்ன கும்பல், மேற்சொன்ன காரணிகளை வைத்து எடப்பாடியாரை கார்னர் செய்துவிடுவோம் என்று மிரட்டிப் பார்க்கிறார்களே தவிர, ஒருவர் கூட, ஒரே ஒருத்தர் கூட, ▪எடப்பாடியார்கிட்ட இருக்கிற தொண்டர்களை இழுத்து, எடப்பாடியாரைத் தோற்கடித்து விடுவோம் ▪எடப்பாடியார்கிட்ட இருக்கிற நிர்வாகிகளை எங்கள் பக்கம் மாற்றி, எடப்பாடியாரைத் தோற்கடிப்போம் ▪எடப்பாடியாரை விட அதிகமாக உழைத்து வியூகமமைத்து அவரை வென்று காட்டுவோம் ▪எடப்பாடியார் க்கு இருக்கும் செல்வாக்கைக்...

ரவீந்திரன் துரைசாமி : இதனால் தான் இப்படி குதிக்கிறான்

படம்
ரவீந்திரன் துரைசாமி, ஜெயலலிதா அம்மாவிடம் ராஜ்ய சபா எம்பி சீட் கேட்டான். அதெல்லாம் குடுக்க முடியாது என்று அனுப்பிவிட்டார்கள். சசிகலா சிபாரிசு செய்தும் கிடைக்காமல் போனது. அதை கிடைக்க விடாமல் செய்ததில் 5 வர் அணிக்கு முக்கிய பங்குள்ளது. அந்த ஐவர் அணியில் முக்கியமாக எடப்பாடி கே பழனிச்சாமி (சசிகலா ஆதரவாளராக அறியப்பட்டு தற்போது எதிராக உறுதியாக இருப்பவர்), நத்தம் விஸ்வநாதன் (சசிகலா எதிர்ப்பு என்பதில் உறுதியாக இருப்பவர், யார் சசிகலாவை எதிர்த்தாலும் அவர்களுக்கு பின்னால் இருப்பவர்), கேட்பார் பேச்சை கேட்கும் பன்னீர் (சசிகலா அடிமையாக இருந்து, சசிகலாவி்டம் பேரம் பேசியது வரை உயர்ந்து, பதவி போனவுடன் சசிகலாவை எதிர்த்து, பதவி தன்னை விட்டு மீண்டும் போனவுடன் திருப்பவும் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து, தற்போது நடுரோட்டில் இருப்பவர்), பழனியப்பன் (அமமுக சென்று, தற்போது திமுகவில் இருக்கிறார்), வைத்தியலிங்கம் (சசிகலா எதிர்ப்பில் உறுதியாக இருந்தவர், மூளை கோளாறு ஏற்பட்டு தற்போது பன்னீரோடு சேர்ந்து சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு பன்னீரோடு துணையாக நடு ரோட்டில் நிற்பவர்) ஆகியோர் இருந்த...

23 ஜூன் அன்றே பொதுச் செயலாளர் ஆகியிருப்பார் மாண்புமிகு எடப்பாடி கே பழனிசாமி!!!!

படம்
பொதுக்குழுவில் 23 தீர்மானம் தான் நிறைவேற்ற வேண்டும் என்று வரம்புமீரிய ( உச்சநீதிமன்றம் சொன்ன வார்த்தை இது) தீர்ப்பால் அதுவும் இரவு முழுவதும் விசாரித்து பகல் 4:30 மணிக்கு வழங்கிய (சாமானியன் தவறே செய்யாதவன் நிரபராதி என தீர்ப்பு வழங்கவே 10 நாள் வரை எடுத்துக் கொள்ளும் நீதிமன்றம் என்பதையும் நினைவில் கொண்டு) தீர்ப்பால் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் ஆகியிருக்க வேண்டியர் மீண்டும் நீதிமன்ற தீர்புக்கு காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். நீதிமான்கள் கடவுளுக்கு சமம் என்பது தனிமனிதனின் ஆசைக்கு, அரசியல் அழுத்தங்களுக்கு, அதிகாரவர்கங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கவேண்டும் என்பதற்கு தானே தவிர அவர்களின் இத்தகைய வரம்புமீரிய தீர்புகளுக்கு இல்லை. ஒரு வேளை ஜூன் மாதம் 23 ஆம் தேதி அதிகாலையில் இந்த தீர்ப்பு உச்சநீதின்றத்தில் கூறிய போல வரம்புமீரிய தீர்ப்பு கொடுக்காமல் இருந்திருந்தால் மாண்புமிகு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கடந்த பொதுக்குழுவிலேயே பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பார். தற்போது வரை எவ்வளவு அரசியல் அழுத்தங்கள் கடந்த 14-15 நாட்களாக இவை அனைத்தும் ஒரு தவறான தீர்ப்பால் தானே. இதை கேள்வி கே...

தகுதியானவர் தலைமையேற்பார்அவர் தலைமையில் செயல்படுவோம்...

படம்
அன்புள்ள இரட்டை இலைக்காரனுக்கு, நம் கட்சியை யார் வழிநடத்த வேண்டும் என்பதில் உங்களுக்கும் எங்களுக்கும் வேறுபாடு உள்ளது உண்மை தான்.  நாங்கள் சில விஷயங்களை மனதில் வைத்து அண்ணன் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் நம் பெருமைமிகு அண்ணாதிமுகவை வழிநடத்த வேண்டுமென நினைக்கிறோம். நீங்களும் அவ்வாறு சிலவற்றை மனதிலிருத்தி, திரு. ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வரவேண்டுமென விரும்பலாம்.  யாரோ ஒருவர் நிச்சயமாக ஜெயிப்பர். இருவரில் ஒருவர் நிச்சயமாக தோற்பர். ஆனால் ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படுவதே நிர்வாகத்திற்கு உகந்தது என்பதில் உறுதியாய் அனைத்துத் தொண்டர்களும் இருக்கிறார்கள். இருக்கட்டும். தவறில்லை.  இந்த நிர்வாக ரீதியலான பிரச்சினை ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும் உறுதியாய். அன்றிலிருந்து மீண்டும் திமுகவை நோக்கி நம் இலக்கு பாயட்டும்.  முடிவு ஏற்படும் வரை நாங்களும் நீங்களும், எங்கள் கருத்தும் உங்கள் கருத்தும், மோதிக்கொள்ளட்டும். முடிவான பிறகு ஒருங்கிணைந்தே செயல்படுவோம் கழக இலக்கை நோக்கி.  இதில், நாம் வெற்றி பெற்று விட்டோம் என்கிற திமிரு வெற்றிபெற்ற தரப்புக்கும் தேவையி...