இடுகைகள்

23 ஜூன் அன்றே பொதுச் செயலாளர் ஆகியிருப்பார் மாண்புமிகு எடப்பாடி கே பழனிசாமி!!!!

படம்
பொதுக்குழுவில் 23 தீர்மானம் தான் நிறைவேற்ற வேண்டும் என்று வரம்புமீரிய ( உச்சநீதிமன்றம் சொன்ன வார்த்தை இது) தீர்ப்பால் அதுவும் இரவு முழுவதும் விசாரித்து பகல் 4:30 மணிக்கு வழங்கிய (சாமானியன் தவறே செய்யாதவன் நிரபராதி என தீர்ப்பு வழங்கவே 10 நாள் வரை எடுத்துக் கொள்ளும் நீதிமன்றம் என்பதையும் நினைவில் கொண்டு) தீர்ப்பால் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் ஆகியிருக்க வேண்டியர் மீண்டும் நீதிமன்ற தீர்புக்கு காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். நீதிமான்கள் கடவுளுக்கு சமம் என்பது தனிமனிதனின் ஆசைக்கு, அரசியல் அழுத்தங்களுக்கு, அதிகாரவர்கங்களுக்கு அப்பாற்பட்டு நிற்கவேண்டும் என்பதற்கு தானே தவிர அவர்களின் இத்தகைய வரம்புமீரிய தீர்புகளுக்கு இல்லை. ஒரு வேளை ஜூன் மாதம் 23 ஆம் தேதி அதிகாலையில் இந்த தீர்ப்பு உச்சநீதின்றத்தில் கூறிய போல வரம்புமீரிய தீர்ப்பு கொடுக்காமல் இருந்திருந்தால் மாண்புமிகு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கடந்த பொதுக்குழுவிலேயே பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பார். தற்போது வரை எவ்வளவு அரசியல் அழுத்தங்கள் கடந்த 14-15 நாட்களாக இவை அனைத்தும் ஒரு தவறான தீர்ப்பால் தானே. இதை கேள்வி கே...

தகுதியானவர் தலைமையேற்பார்அவர் தலைமையில் செயல்படுவோம்...

படம்
அன்புள்ள இரட்டை இலைக்காரனுக்கு, நம் கட்சியை யார் வழிநடத்த வேண்டும் என்பதில் உங்களுக்கும் எங்களுக்கும் வேறுபாடு உள்ளது உண்மை தான்.  நாங்கள் சில விஷயங்களை மனதில் வைத்து அண்ணன் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் நம் பெருமைமிகு அண்ணாதிமுகவை வழிநடத்த வேண்டுமென நினைக்கிறோம். நீங்களும் அவ்வாறு சிலவற்றை மனதிலிருத்தி, திரு. ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வரவேண்டுமென விரும்பலாம்.  யாரோ ஒருவர் நிச்சயமாக ஜெயிப்பர். இருவரில் ஒருவர் நிச்சயமாக தோற்பர். ஆனால் ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படுவதே நிர்வாகத்திற்கு உகந்தது என்பதில் உறுதியாய் அனைத்துத் தொண்டர்களும் இருக்கிறார்கள். இருக்கட்டும். தவறில்லை.  இந்த நிர்வாக ரீதியலான பிரச்சினை ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும் உறுதியாய். அன்றிலிருந்து மீண்டும் திமுகவை நோக்கி நம் இலக்கு பாயட்டும்.  முடிவு ஏற்படும் வரை நாங்களும் நீங்களும், எங்கள் கருத்தும் உங்கள் கருத்தும், மோதிக்கொள்ளட்டும். முடிவான பிறகு ஒருங்கிணைந்தே செயல்படுவோம் கழக இலக்கை நோக்கி.  இதில், நாம் வெற்றி பெற்று விட்டோம் என்கிற திமிரு வெற்றிபெற்ற தரப்புக்கும் தேவையி...

ஓ பன்னீர்செல்வம் செய்வது அண்ணாதிமுகவிற்கு செய்யும் பச்சைத் துரோகமாகும்!!!

படம்
அதிமுகவின் மொத்த பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை - 2665 இதுவரை (28 ஜூன் 2022) ஆதரவு, எடப்பாடியாருக்கு  - 2441 உறுப்பினர்கள் ஆதரவு OPS க்கு - 77 பேர் ஆதரவு இதுவரை முடிவு எடுக்காதவர்கள் - 147 அதாவது,  எடப்பாடியாருக்கு  -  92% OPS க்கு - 3% நடுநிலை - 5% இந்த 3% ஐ வைத்துக்கொண்டு 50% அதிகாரம் கேட்பது தான் அராஜகம். அட்டூழியம். தொண்டர்களுக்குச் செய்யும் துரோகம். தன்னை வளர்த்த கட்சிக்கு செய்யும் பச்சைத் துரோகம். தனக்கு தொண்டர்கள் ஆதரவில்லை என்று தெரிந்தும், தன்னைத் தொண்டர்கள் விரும்பவில்லை எனத் தெரிந்தும், ஜானகி அம்மையார் போல் பெருந்தன்மையாக விலகிக் கொள்ளாமல்,   ஓபிஎஸ் அவர்கள் கட்சியின் செயல்பாட்டை, கட்சியின் மீதான இமேஜை, சிதைக்கும் விதமாக, கோர்ட், தேர்தல் ஆணையம் என செல்வது, 25 வருடம் MLA, 15 வருடம் அமைச்சர், 3 முறை முதல்வர் பதவி கொடுத்து அழகு பார்த்த அண்ணாதிமுகவிற்கு செய்யும் பச்சைத் துரோகமாகும்.

இது வன்முறை வெறியாட்டமா??

படம்
இது வன்முறை வெறியாட்டமா?🔥 தலைமை கழகத்தில் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேனரை கிழித்தது வன்முறை என்கிறார்கள். மறுப்பதற்கில்லை, ஆனால், 4 ஆண்டுகள் துணைமுதல்வராக இருந்த போது தொண்டர்களை கண்ணுக்கு தெரியவில்லை,  5 ஆண்டுகள் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கும்போது தொண்டர்களை கண்ணுக்குத் தெரியவில்லை. தொண்டை வற்றி பேச முடியாமல் கஷ்டப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி,  சொந்த மாவட்டத்தை விட்டு வெளியேறாமல் இருந்த போது, தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டர்களை கண்ணுக்குத் தெரியவில்லை. பதவி பறி போகிறது என்று தெரிந்ததும் தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என எப்படி பேச முடிகிறது ?  தர்மயுத்தம் நடத்தினால் அதற்கும் தொண்டர்கள் வரவேண்டும், சசிகலாவை ஆதரிக்க வேண்டும் என்றால் அதற்கும் தொண்டர்கள் வரவேண்டும்,  டெல்லியின் அடிமையாக தன் மகன் இருப்பான் அதற்கும் தொண்டர்கள் முட்டுக் கொடுக்க வேண்டும்,  திமுக அரசுக்கு பாராட்டினால் அதற்கும் தொண்டர்கள் முட்டுக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் சாத்தியம்?  இத்தனை ஆண்டுகள் பொ...

இந்தியக் கூட்டாட்சி என்பது மாநில அரசும் மத்திய அரசும் எப்போதும் ஒருங்கிணைந்து உரையாடக் கூடிய இடம்

படம்
இந்தியக் கூட்டாட்சி என்பது மாநில அரசும் மத்திய அரசும் எப்போதும் ஒருங்கிணைந்து உரையாடக் கூடிய இடம். - உச்சநீதிமன்றம் அண்ணாவின் பெயரை கட்சியில் மட்டுமல்லாமல் கொள்கையிலும் கொண்ட அதிமுக எப்போதும் போராடுவது மாநில சுயாட்சி மட்டுமே. கடந்த ஆட்சியில் இதையே எடப்பாடி கே பழனிசாமி செய்தார். இணக்கம் என்ற வார்த்தையை உபயோகித்தார் கிட்டத்தட்ட அவர் செய்தது கூட்டாட்சி தான். இரு மொழி கொள்கை தான் என்றார் - உறுதியாக நின்றார், தேவையான வேலைகளில் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்த போக்கை கடைப்பிடித்தார். 11 மருத்துவ கல்லூரிகளை பெற்றார், AIIMS மருத்துவமனை போன்றவைகளை கொண்டு வந்தார், GST நிலுவை தொகையை சமரசமின்றி தொடர்ந்து கேட்டு வலியுறுத்தினார், எல்லாவற்றுக்கும் மத்திய அரசை காரணம் சொல்லி தப்பித்துக் கொள்ளவில்லை. நேற்று பேரறிவாளன் விடுதலை உட்பட எடப்பாடி சாதித்து காட்டியது தான். அவரை திமுகவின் வேசி ஊடகவாதிகள் அடிமை என்றனர். ஆனால் இன்று பாஜகவின் பசுபடம் அமைக்கும் வேலையை திமுக இங்கு செய்கிறது, ஆனால் பெயரளவில் எல்லாவற்றையும் எதிர்க்கிறது என்ற பிம்பத்தை மட்டும் காட்டிக் கொண்டு கொள்ளை  அடித்து கொ...

தமிழ் வேசி ஊடகம் மற்றும் ஊடகவாதிகள்!!!

படம்
சட்டமன்றத்தில் அம்மாவின் படம் திறக்க அரசு விழாவுக்கு அழைப்பு விடுத்தார் எடப்பாடி கே பழனிசாமி, மறுத்துவிட்டது மோடி அரசு. உண்மை தான். ஆனால் திமுக போல் டெல்லியில் கட்சி அலுவலகம் திறக்க கூப்பிட்டு மூக்கு உடைபடவில்லை. சிலை திறக்க துணை குடியரசுத் தலைவரை கூப்பிட்டு நிற்கிறது திமுக. அடிமை அரசு என்று இவர்கள் வைத்த விமர்சனம் தற்போது இவர்கள் மீதும் வைக்க வேண்டும் ஆனால் வைக்க மறுக்கிறது விலைபோன வேசி ஊடகம் ஊடகவாதிகள். அடுத்தவன் உழைப்பை திருடும் வேலையை பட்டவர்த்தனமாக செய்கிறது திமுக. அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது வேசி ஊடகம் ஊடகவாதிகள். அதை கூட அதிமுக வே முறியடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பது கொடுமையிலும் கொடுமை. திமுக குடும்ப ஆதிக்கம் திரைத் துறையில் மேலோங்கி இருக்கிறது. வெளியாகும் அனைத்து பெரிய படங்களையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே கைபற்றுகிறது என்பது திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு தான் என்பதை பேச மறுக்கிறது வேசி ஊடகம் ஊடகவாதிகள். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எல்லா ஊர் காவல்நிலைய வாசலிலும் திமுக கொடி பொருத்திய கார் வலமவந்து கொண்டே இரு...

அண்ணா திமுக என்ற 6 மாதங்கள் வயதேயான கட்சி திமுகவை வீழ்த்திய தினம் இன்று

படம்
மத்தியில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ்,  மாநிலத்தில் ஆண்டு கொண்டிருந்த திமுக என இரு பெரும் கட்சிகளை அண்ணா திமுக என்ற 6 மாதங்கள் வயதேயான கட்சி வீழ்த்திய தினம் இன்று ( 21-05-1973) அதிகார மமதையில் , ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதுபோல் நன்றி மறந்து கருணாநிதி எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு 1972ல் நீக்கினார். கருணா செய்த துரோகத்தின் பலன் அடுத்த 6 மாதத்தில் தோல்வியில் தொடங்கியது. திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக வென்றது காங்கிரசைதான். மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த திமுகவை நேரடியாக வீழ்த்தமுடியாதபடி அது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன் பிறகு நடந்த அனைத்து இடைத்தேர்தல்களிலும் அதிமுகவே தொடர்ச்சியாக வெற்றி பெற்றது.  துரோகியின் கண் முன்னே சிறப்பாக வாழ்ந்துகாட்டுவதைவிட மிகப்பெரிய தண்டனை எதையும் கொடுத்துவிட முடியாது என்பதை எம்.ஜி.ஆர் வாழ்ந்து காட்டினார். நன்றி: கதிர்வளவன்