இது வன்முறை வெறியாட்டமா??
இது வன்முறை வெறியாட்டமா?🔥
தலைமை கழகத்தில் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேனரை கிழித்தது வன்முறை என்கிறார்கள்.
மறுப்பதற்கில்லை, ஆனால்,
4 ஆண்டுகள் துணைமுதல்வராக இருந்த போது தொண்டர்களை கண்ணுக்கு தெரியவில்லை,
5 ஆண்டுகள் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கும்போது தொண்டர்களை கண்ணுக்குத் தெரியவில்லை.
தொண்டை வற்றி பேச முடியாமல் கஷ்டப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி, சொந்த மாவட்டத்தை விட்டு வெளியேறாமல் இருந்த போது, தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டர்களை கண்ணுக்குத் தெரியவில்லை.
பதவி பறி போகிறது என்று தெரிந்ததும் தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என எப்படி பேச முடிகிறது ?
தர்மயுத்தம் நடத்தினால் அதற்கும் தொண்டர்கள் வரவேண்டும், சசிகலாவை ஆதரிக்க வேண்டும் என்றால் அதற்கும் தொண்டர்கள் வரவேண்டும்,
டெல்லியின் அடிமையாக தன் மகன் இருப்பான் அதற்கும் தொண்டர்கள் முட்டுக் கொடுக்க வேண்டும், திமுக அரசுக்கு பாராட்டினால் அதற்கும் தொண்டர்கள் முட்டுக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் சாத்தியம்?
இத்தனை ஆண்டுகள் பொறுமை காத்த தொண்டர்கள், இவருக்கு மேலும் தலைமைப் பீடத்தில் இவர் இருக்கக்கூடாது என்கிற கோபத்தின் வெளிப்பாடுதான் இன்றைய தினத்தின் காட்சிகள்.
சுய மரியாதையை எதிர்பார்த்த தொண்டர்களின் வெளிப்பாடுதான் இது, அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பது விதி...
கருத்துகள்
கருத்துரையிடுக