தமிழ் வேசி ஊடகம் மற்றும் ஊடகவாதிகள்!!!
சட்டமன்றத்தில் அம்மாவின் படம் திறக்க அரசு விழாவுக்கு அழைப்பு விடுத்தார் எடப்பாடி கே பழனிசாமி, மறுத்துவிட்டது மோடி அரசு. உண்மை தான்.
ஆனால் திமுக போல் டெல்லியில் கட்சி அலுவலகம் திறக்க கூப்பிட்டு மூக்கு உடைபடவில்லை. சிலை திறக்க துணை குடியரசுத் தலைவரை கூப்பிட்டு நிற்கிறது திமுக. அடிமை அரசு என்று இவர்கள் வைத்த விமர்சனம் தற்போது இவர்கள் மீதும் வைக்க வேண்டும் ஆனால் வைக்க மறுக்கிறது விலைபோன வேசி ஊடகம் ஊடகவாதிகள்.
அடுத்தவன் உழைப்பை திருடும் வேலையை பட்டவர்த்தனமாக செய்கிறது திமுக. அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது வேசி ஊடகம் ஊடகவாதிகள். அதை கூட அதிமுக வே முறியடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பது கொடுமையிலும் கொடுமை.
திமுக குடும்ப ஆதிக்கம் திரைத் துறையில் மேலோங்கி இருக்கிறது. வெளியாகும் அனைத்து பெரிய படங்களையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே கைபற்றுகிறது என்பது திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு தான் என்பதை பேச மறுக்கிறது வேசி ஊடகம் ஊடகவாதிகள்.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எல்லா ஊர் காவல்நிலைய வாசலிலும் திமுக கொடி பொருத்திய கார் வலமவந்து கொண்டே இருப்பது கடந்த ஆட்சியில் இல்லாத கருணாநிதி காலத்தை காட்டிலும் அதிகமாக இருப்பதை எந்த வேசி ஊடகமும் ஊடகவாதியும் சொல்லவில்லை.
டாஸ்மாக் பார்கள் டெண்டர் ஊழல், பொங்கல் தொகுப்பு குளறுபடி, துபாய் இன்ப குடும்ப சுற்றுலா, அரசின் தவறால் கல்குவாரி விபத்து நால்வர் மரணம், கடந்த 7-8 வருடங்களாக இல்லாத அளவு மின்வெட்டு, விக்னேஷ் என்ற அப்பாவி தலித் இளைஞர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கொல்லப்பட்டது என எதையுமே பேசாத தமிழ் வேசி ஊடகம் ஊடகவாதிகள் அதிமுகவின் சாதனைக்கு திமுக ஸ்டாலின் செய்தது போல் ஸ்டிக்கர் ஓட்டுவதற்கு ஒத்து ஊதி கொண்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக