அண்ணா திமுக என்ற 6 மாதங்கள் வயதேயான கட்சி திமுகவை வீழ்த்திய தினம் இன்று
மத்தியில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ், மாநிலத்தில் ஆண்டு கொண்டிருந்த திமுக என இரு பெரும் கட்சிகளை அண்ணா திமுக என்ற 6 மாதங்கள் வயதேயான கட்சி வீழ்த்திய தினம் இன்று ( 21-05-1973)
அதிகார மமதையில் , ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதுபோல் நன்றி மறந்து கருணாநிதி எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு 1972ல் நீக்கினார். கருணா செய்த துரோகத்தின் பலன் அடுத்த 6 மாதத்தில் தோல்வியில் தொடங்கியது.
திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக வென்றது காங்கிரசைதான். மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த திமுகவை நேரடியாக வீழ்த்தமுடியாதபடி அது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன் பிறகு நடந்த அனைத்து இடைத்தேர்தல்களிலும் அதிமுகவே தொடர்ச்சியாக வெற்றி பெற்றது.
துரோகியின் கண் முன்னே சிறப்பாக வாழ்ந்துகாட்டுவதைவிட மிகப்பெரிய தண்டனை எதையும் கொடுத்துவிட முடியாது என்பதை எம்.ஜி.ஆர் வாழ்ந்து காட்டினார்.
நன்றி: கதிர்வளவன்
கருத்துகள்
கருத்துரையிடுக