என்ன நடந்தது 25 செப்டம்பர் 2023 அன்று அதிமுக தலைமை அலுவலகம் எம்.ஜி.ஆர் மாளிகையில்...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வைத்து எடப்பாடி தெளிவுப்படுத்திய நிலையில், அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகியோரை செப். 23-ம் தேதி டெல்லிக்கு அனுப்பிவைத்தார் எடப்பாடி. அவர்களும் அண்ணாமலை குறித்து கருத்தை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் தெளிவுப்படுத்தினார்கள். ஆனால், ஜே.பி.நட்டா அதை காதிலேயே வாங்கிகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில்தான் அ.தி.மு.க தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் செப்.25-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுமென்று 24-ம் தேதி காலை அறிவிப்பு வெளியானபோதே, `பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை' என்பதை எடப்பாடி அறிவிக்கப்போகிறாரென்று தகவல் பரவியது. அதன்படி, செப்.25-ம் மதியமே அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூடத்தொடங்கினர். வழக்கத்துக்கு மாறாக கூட்டமும் அலைமோதியது. ஆங்காங்கே அண்ணாமலைக்கு எதிராகவும், பா.ஜ.க-வுக்கு எதிராக கோஷங்களை கேட்ட முடிந்தது. கூட்டத்துக்கு வரும் நிர்வாகிகளின் செல்போன்கள் மு...