இடுகைகள்

இதுவரை எங்கயா இருந்தீங்க நீங்க????

படம்
இதுவரை எங்கயா இருந்தீங்க நீங்க???? தலைவன் என்பவன் எப்போதும் நியமிக்கப்படும் நபர் இல்லை, தலைவன் என்பவன் உறுவாகுவான் என்று உணர்த்திய முதல்வரே எங்கயா இருந்தீங்க இதுவரை. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "தலைவருடன் ஒரு நாள்" என்ற நிகழ்ச்சியில் நெறியாளர் திரு. கார்த்திகை செல்வன் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய விதம் இதுவரை கண்டிராத நேர்காணல் ஏனெனில் அவ்வளவு தெளிவு. இந்த நேர்காணல் வைத்து அவர்கள் எந்த ஃபிளாஷ் செய்தியும் போட முடியாதபடி இருந்தது. இதை பார்த்த எனக்கு எங்கயா இருந்தீங்க இதுவரை என கேட்க தோன்றியது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு யார் என்றே தெரியாது என்று கனிமொழி கூறினார். ஆம் அவர் யார் என்று தெரியாது என்பது உண்மையே. ஆனால் இன்று உன் அண்ணன் இவரை பார்த்து தான் பயப்படுகிறார். இவரை பார்த்து நீங்கள் கேட்க வேண்டியது இதுவரை எங்கயா இருந்தீங்க என்றே. இவர் கோவையில் காலை 8:30 (ஜனவரி 23) மணிக்கு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார், இவர் இதை முடித்து தூங்க சென்ற போது மணி இரவு 10:00, மறுநாள் காலையில் (ஜனவரி 24) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய போது நேரம் அதே 8:30. இடையில் உணவு, தே...

அம்மா ஜெயலலிதா அவர்களின் நினைவிட அழைப்பிதழ்

படம்

இப்போதே சொல்ல முடியாது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் அடுத்த முதல்வர் என்று???

படம்
இப்போதே சொல்ல முடியாது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் அடுத்த முதல்வர் என்று??? ஆனால் அவர் வருவார் என்ற நம்பிக்கை மட்டும் எனக்குள் இருக்கிறது. அதற்கு ஒரு 10 காரணங்களை சொல்லுகிறேன். 1. அவர் ஒரு 10 நாள் தாங்க மாட்டார், 3 மாதம் மாட்டார் என்று ஸ்டாலின் அவர்கள் நம்பினார். நாம் ஏன் இவரை எதிர்க்க வேண்டும், ஓ பி எஸ்ஸை எதிர்ப்போம் என்று எடப்பாடியாரை சாதாரனமாக எண்ணி விட்டார் போலும். ஆனால் தற்போது நிலைமை தலைக்கீழ்.  2. TTV தினகரன் என்னும் நபர், ஒரு தொகுதியில் நின்று அதிமுக திமுக என்ற மிகப் பெரிய கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற்றார். ஆனால் அதை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இது RK நகர்க்கான வெற்றி, பொது தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாது என்று கூறி விட்டு சென்றார். அந்த நிதானம் தான் அரசியலில் அவர் இன்றும் களத்தில் இருக்க வைக்கிறது. 3. 18 MLA க்கள் TTV தினகரன் பக்கம் நின்று இவருக்கு குடைச்சல் கொடுக்க இவர் அவர்களை நீக்கி உத்தவு பிறப்பித்தது மிகப்பெரிய முடிவு. இவரின் தைரியம் வெளிப்பட்ட தருணம் அது. 4. 18 MLA க்கள் இடைத்தேர்தல் வரும் போது அதை சாதுர்யமாக அது தன் களமல்ல என்று பொதுத் தேர்த...

1% வாக்கு வச்சிகிட்டு நீ பண்ணுற அலப்பறை இருக்கே...

படம்
1% வாக்கு வச்சிகிட்டு நீ பண்ணுற அலப்பறை இருக்கே... விஜயகாந்த் என்ற மனிதனுக்கு மட்டுமே விழுந்த வாக்கு 10%... அவர் நேரடி தீவிர அரசியலில் இல்லாத நிலையில் 1% இருப்பதே அவர் மீது கொண்ட பற்றே ஒழிய வேறு எதுவும் இல்லை. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தேர்தல் கூட்டணி பேசுவது, தேர்தல் பிரச்சாரம் செய்வது மட்டுமே அரசியல் என்று நினைத்து கொண்டு இருக்கிறார் போலும். 2011 ல் விஜயகாந்த் அவர்கள் நேரடி அரசியலில் இருந்த போது 41 என்றால், தற்போது உங்கள் தகுதி 4 தொகுதி தான். இதை தற்போது உணர்ந்து அதில் முழுவதும் வெற்றி பெற்று வரும் தேர்தலில் அந்த MLA க்களால் மேலும் கட்சியை வளர்த்தால் மட்டுமே அரசியலில் நீடிக்க முடியும்.  தற்போது நீங்கள் சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளீர்கள் என்பது நீங்கள் அமமுக பக்கம் ஒரு கால் வைப்பது போல் இருக்கிறது. அது தான் உங்கள் நிலைபாடு என்றால் நீங்கள் அரசியல் படு குழியை நீங்களே நோண்டுகின்றீர் என்பது மட்டும் நிச்சயம் உணர்வீர் தேர்தல் முடிவுக்கு பின்னர்.  அரசியல் என்பது நீங்கள் நினைப்பது போல் இல்லை என்பது உண்மை.

தேர்தல் பிரச்சாரம்: கோவையை குலுங்க வைத்த எடப்பாடியார்

படம்
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோயம்புத்தூர், ஆளும் அதிமுக ஆட்சியில், முன்னெப்போதும் இல்லாத மாபெரும் வளர்ச்சியை கண்டிருப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளிலும், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி,உள்ளிட்ட பல்வேறு சட்டமன்ற தொகுதிகளிலும் முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார். கோயம்புத்தூர் இராஜவீதியில் தனது பரப்புரையைத் தொடங்கிய முதலமைச்சர், ஆளும் அதிமுக அரசால், 10 லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் வேலை கிடைத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். போத்தனூர் பகுதியில், அனைத்து இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகளையும் சந்தித்து கலந்துரையாடிய முதலமைச்சருக்கு, ஜமாத்தார் சார்பில், சமூக கல்வி பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. குல்லா அணிந்து இஸ்லாமியர்களின் ஆதரவை கோரிய முதலமைச்சர், ஹஜ் புனித யாத்திரைக்கான நிதியை மத்திய அரசு ரத்து செய்தபோது, தமிழக ஆளும் அதிமுக அரசு, தொடர்ந்து வழங்கி வருவதாக குறிப்பிட்டார். குனியமுத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர், உள்ளாட்சித்துறையும், அதற்கான அமைச்சர் எஸ்.பி...

இலங்கை கடற்படை தாக்குதலால் 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ரூ.10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி

படம்
இலங்கை கடற்படை தாக்குதலால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, ரூ.10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆணை. இலங்கை கடற்படையின் இச்செயலை வன்மையாக கண்டித்து உத்தரவு.

சசிகலாவை கொலை செய்ய சதியா??? அமமுக நிர்வாகிகள்

படம்
சசிகலாவை கொலை செய்ய சதியா??? சமூக வலைதளங்கள் முழுவதும் இந்த செய்தியை பரப்பும் நபர்கள் ஒன்று திமுக( அதில் அரசியல் இருக்கிறது, அதனால் அவர்கள் அதை செய்யவில்லை என்றால் தான் ஆச்சர்யம்), இரண்டு அமமுக தொண்டர்கள்.  அடேய் 4 வருடத்திற்கு முன் இதே குற்றச்சாட்டு உங்கள் சசிகலா மீதும் இருந்ததே??? அப்ப பிஜேபி யின் சொல் படி அம்மாவை கொன்றாரா உங்கள் சசிகலா??? அப்போது இல்லை இப்போது இருக்கிறதா??? உங்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா???? இதுவரை, இல்லை!!! எப்போதும் திருமதி சசிகலா தான் அம்மாவை கொன்றார் என்ற கூற்று பொய்யானது என்று எப்போதும் சொல்லுவேன். உடல் நல குறைவு என்பது வர தான் செய்யும், அது என்று வரும் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒரு வேளை தான் வெளியே வர போகிறோம் என்ற மனமாற்றத்தால் கூட உடல் சுகவீனம் ஏற்பட்டு இருக்கலாம். பொது புத்தியில் பேசும் திரு. குருமூர்த்தி போன்று யோசிக்காமல். திருமதி. சசிகலா அவர்கள் உடல் நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்திப்போம். அவர் நேரடி அரசியலுக்கு வருவதை தான் எதிர்க்கின்றேனே ஒழிய, அவரே ஒழிய வேண்டும் என்று என்றும் இருந்தது கிட...