இதுவரை எங்கயா இருந்தீங்க நீங்க????

இதுவரை எங்கயா இருந்தீங்க நீங்க????

தலைவன் என்பவன் எப்போதும் நியமிக்கப்படும் நபர் இல்லை, தலைவன் என்பவன் உறுவாகுவான் என்று உணர்த்திய முதல்வரே எங்கயா இருந்தீங்க இதுவரை.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "தலைவருடன் ஒரு நாள்" என்ற நிகழ்ச்சியில் நெறியாளர் திரு. கார்த்திகை செல்வன் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய விதம் இதுவரை கண்டிராத நேர்காணல் ஏனெனில் அவ்வளவு தெளிவு. இந்த நேர்காணல் வைத்து அவர்கள் எந்த ஃபிளாஷ் செய்தியும் போட முடியாதபடி இருந்தது. இதை பார்த்த எனக்கு எங்கயா இருந்தீங்க இதுவரை என கேட்க தோன்றியது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு யார் என்றே தெரியாது என்று கனிமொழி கூறினார். ஆம் அவர் யார் என்று தெரியாது என்பது உண்மையே. ஆனால் இன்று உன் அண்ணன் இவரை பார்த்து தான் பயப்படுகிறார். இவரை பார்த்து நீங்கள் கேட்க வேண்டியது இதுவரை எங்கயா இருந்தீங்க என்றே.

இவர் கோவையில் காலை 8:30 (ஜனவரி 23) மணிக்கு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார், இவர் இதை முடித்து தூங்க சென்ற போது மணி இரவு 10:00, மறுநாள் காலையில் (ஜனவரி 24) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய போது நேரம் அதே 8:30. இடையில் உணவு, தேநீர் இடைவேளை மட்டுமே ஓய்வு. ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து விட்டு இவ்வாறு உழைக்கும் நீங்கள் இதுவரை எங்கயா இருந்தீங்க.

தமிழகம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்ட முதல்வர் நீங்கள். திமுக காங்கிரஸ் ஆட்சியில் வேண்டுமென்றே காலம் கடத்திய காவேரி & முல்லை பெரியாறு பிரச்சனைகளுக்கு தீர்வு, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்து திமுக கொண்டு வந்த hydrocarbon திட்டங்களுக்கு மூடு விழா கண்டு தீர்வு, திமுக காங்கிரசால் கொண்டு வரப்பட்ட NEETதேர்வால் பாதிக்கப்பட்ட ஏழை மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு கொண்டு வந்து தீர்வு, திமுக ஆட்சியில் விரிவாக்க பணிக்கு அனுமதி வழங்கிய தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்ப்பட்ட இடற்பாட்டுக்கு மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஆலையை மூடி தீர்வு என எப்போதும் தீர்வை நோக்கி பயணிக்கும் முதல்வரே இதுவரை எங்கயா இருந்தீங்க.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?