இப்போதே சொல்ல முடியாது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் அடுத்த முதல்வர் என்று???
இப்போதே சொல்ல முடியாது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் அடுத்த முதல்வர் என்று???
ஆனால் அவர் வருவார் என்ற நம்பிக்கை மட்டும் எனக்குள் இருக்கிறது. அதற்கு ஒரு 10 காரணங்களை சொல்லுகிறேன்.
1. அவர் ஒரு 10 நாள் தாங்க மாட்டார், 3 மாதம் மாட்டார் என்று ஸ்டாலின் அவர்கள் நம்பினார். நாம் ஏன் இவரை எதிர்க்க வேண்டும், ஓ பி எஸ்ஸை எதிர்ப்போம் என்று எடப்பாடியாரை சாதாரனமாக எண்ணி விட்டார் போலும். ஆனால் தற்போது நிலைமை தலைக்கீழ்.
2. TTV தினகரன் என்னும் நபர், ஒரு தொகுதியில் நின்று அதிமுக திமுக என்ற மிகப் பெரிய கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற்றார். ஆனால் அதை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இது RK நகர்க்கான வெற்றி, பொது தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாது என்று கூறி விட்டு சென்றார். அந்த நிதானம் தான் அரசியலில் அவர் இன்றும் களத்தில் இருக்க வைக்கிறது.
3. 18 MLA க்கள் TTV தினகரன் பக்கம் நின்று இவருக்கு குடைச்சல் கொடுக்க இவர் அவர்களை நீக்கி உத்தவு பிறப்பித்தது மிகப்பெரிய முடிவு. இவரின் தைரியம் வெளிப்பட்ட தருணம் அது.
4. 18 MLA க்கள் இடைத்தேர்தல் வரும் போது அதை சாதுர்யமாக அது தன் களமல்ல என்று பொதுத் தேர்தல் வரை அதை தள்ளிப்போட வைத்த நிகழ்வு என்பது அவரின் அரசியல் புரிதல் வெளிப்பட்ட தருணம் அது.
5. TTV யோடு இருந்தால் நாம் இரண்டாம் நிலையில் தான் இருப்போம் ஆனால் ஓ பி எஸ் உடன் இருந்தால் கட்சியை மீட்டு முதல் நிலைக்கு வர முடியும் என்ற முடிவு இவர் தன்னை தலைவர் ஆக்கிய தருணம் அது.
6. நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி என்றாலும், எடப்பாடி பழனிச்சாமி அந்த தேர்தலில் வெற்றியே பெற்றார். கூட்டணி அமைத்தார், அதுவும் மெகா கூட்டணி, ஆளும் தேசிய கட்சியை 4 சீட்டில் அடக்கிய விதம், அவர் நாடாளுமன்ற தேர்தலை விட சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிகம் கவனம் செலுத்தியது அவரின் அரசியல் சாணக்கியம் வெளிப்பட்ட தருணம் அது.
7. எதில் குறை கண்டுபிடிக்கலாம் என்று காத்துக்கொண்டிருக்கும் ஸ்டாலின், முதல்வர் வேட்பாளர் என்னும் மிக பெரிய பூகம்பம் வெடிக்கும் என்று காத்திருந்தார். பாவம் அவருக்கு இன்னும் தெரியவில்லை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எத்தனுக்கு எத்தன் என்று. அவர் ஓபிஎஸ் அவர்களை தீய சக்திகள் நெருங்குவதற்கு முன் முந்திக் கொண்டு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் அறிவிக்க வைத்த நிகழ்வு இவரின் அரசியல் அறிவை உணர்த்திய நிகழ்வு இது.
8. முதல்வராக அவர் முதல் இரண்டு வருடம் அவரால் செயல்பட முடியவில்லை, கட்சிக்குள் ஆயிரம் விதம் விதமான குரல்கள், கோள் எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்பதை போன்று இருந்த தருணத்தில் இவர் தன் பதவியை தக்க வைத்து தன் காலத்திற்கு காத்து இருந்தது இவருக்கு நிகர் இவரே. மெதுவாக ஆரம்பித்து இருந்தாலும் பிறகு இவர் சூப்பர் வேகமெடுத்து கடந்த இரண்டு வருடங்களாக இவரின் செயல்பாடு, தமிழகத்தை அனைத்து துறையிலும் சிறந்து விளங்க வைத்துள்ளது என்றால் எவரும் நம்ம முடியாத அளவுக்கு இவரின் உழைப்பு மட்டும் போதும் இவரை நம்ப.
9. இவரது எளிமை. எவ்வளவு உயரம் சென்றாலும் இவரின் எளிமை என்பது இவரது கூடுதல் பலம். இவரின் இறைபக்தி இவரின் மதசார்பற்ற நிலை, இவரின் அடுத்தவர்களின் நம்பிக்கையை மதிக்கும் பண்பு என்று சொல்லி கொண்டே போகலாம் இவரை பற்றி...
10. இவரின் செயல்திறன் மட்டும் போதும் இவர் மீண்டும் வர வேண்டும் என்பதற்கு. இவரை எல்லினகை ஆடியவர்கள் இன்று இவரை கண்டு பயந்து கொண்டு இருக்கின்றார்கள். ஆம். இவர் கண்ட எதிர்ப்புகள் வேறு எந்த முதல்வரும் இதுவரை எவரும் எதிர்கொண்டு சாதித்து காட்டியிருக்க மாட்டார்கள். இன்னும் இருக்கிறது இவர் நமக்கு கொடுக்க இருக்கும் இன்ப அதிர்ச்சிக்கு. இவரின் செயல்திறனானது நமக்கு காவேரியை மீட்டது, டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக மாற்றியது, கொரானாவை எதிர் கொண்ட விதம், சொல்லி கொண்டே போகலாம் இவர் செயல்திறன் பற்றி சொல்ல....
இன்னும் நிறைய தலைவர்கள் உள்ளனர் போக போக தெரியும்
பதிலளிநீக்கு