தேசிய மாடலா திராவிட மாடலான்னு நியூஸ்18 விவாதம் ஆனால் இருவரும் பேசியது அதிமுகவின் தமிழ்நாடு மாடலை

தேசிய மாடலா திராவிட மாடலான்னு நியூஸ்18 விவாதம் ல இந்தப் பக்கம் மூனு, அந்தப்பக்கம் மூனுன்னு மொத்தம் ஆறு பேர் பேசினாங்க. பொறுமையா கேட்டேன். திராவிடம் சாதித்தது இது, தேசியம் சாதித்தது இதுன்னு 6 பேரும் போட்ட பட்டியல் எல்லாமே, அண்ணாதிமுகவின் சாதனைப் பட்டியல் தான். இட ஒதுக்கீட்டுல ஆரம்பிச்சி, சத்துணவு வழியா போயி, கல்விப்புரட்சில நின்னு, தொழிற்புரட்சில உயர்ந்து, பொருளாதார முன்னேற்றம்ன்னு சொன்ன அத்தனையுமே அண்ணாதிமுகவின் சாதனைகள் தான். தேசியமாடல் பேசியவர்களின் மோடி உதவித் தொகை தந்தார், மானியம் தந்தார், மின்சார இலக்குன்னு உருட்டினார்கள்.1980 களிலேயே ஒருவீடு ஒரு விளக்கு திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த குடிசைக்கும் ஒளிவிளக்கேற்றிய தமிழகத்தின் ஒப்பற்ற ஒரு இயக்கம் எதுவென்றால் என் அண்ணாதிமுக என்ற எங்கள் மாபெரும் இயக்கமென்று, நெஞ்சை நிமித்திச் சொல்லுவான் அண்ணாதிமுக காரன். இந்த மானியம் உதவித்தொகையை லாம் 1980 களிலேயே வேலை கிடைக்காத படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் வரை உதவித்தொகை, கணவனை இழந்த பெண்களுக்கு உதவித் தொகைன்னு என் தங்கதலைவன் பொன்மனச் செம்மல் புரட்சிதலைவர் அன்றைக்...