அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைப்போம் என்று உறுதி ஏற்போம்!!!
சும்மா அடங்குங்கடா...❤️
அதிமுக அமைதியா இருக்கே, இனி அவ்வளவு தான்..
அதிமுக அதிரடி காட்டலையே, இனி அவ்வளவு தான்....
அதிமுக வரலாற்றில் 66 இடங்களை பிடித்து முதன்முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்தில் அதிக எண்ணிக்கையில் அமர்ந்திருப்பதும் இந்த முறை தான்.
இனி அதிமுக ஆட்சி வராது, இனி சப்போர்ட் பண்றது வேஸ்ட் இப்படியும் ஒரு குரூப் சுத்திக்கிட்டு இருக்கு.
எழுதி வச்சுக்கோங்க..
ஒரு நியமன முதல்வராக இருந்து எடப்பாடி பழனிச்சாமி சாதித்ததை கூட,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரால் இன்று ஒன்றும் கிழிக்க முடியவில்லை என்பதை தமிழக மக்கள் இப்போதுதான் மெல்ல மெல்ல உணர்ந்து வருகிறார்கள்.
நிழலின் அருமை வெயிலில் இருக்கும் போது தான் தெரியும்,
இந்த 11 மாத ஆட்சிக் காலத்தில் ஒரே ஒரு புது திட்டங்கள் இல்லை, சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது எங்கு திரும்பினாலும் கொலை கொள்ளை கற்பழிப்பு பாலியல் வன்கொடுமை, நீட் ரகசிய நாடகம், தேர்தல் வாக்குறுதி படுதோல்வி, குடும்ப ஆதிக்கம் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது இதையெல்லாம் பார்க்கும்போது எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் நமக்கெல்லாம் கிடைக்க மாட்டாரா என்ற நிலையை மக்கள் மெல்ல மெல்ல உணர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.
13 ஸ்மார்ட் சிட்டிஸ், 11 மருத்துவ கல்லூரிகள், 7.5% மருத்துவ படிப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு, தமிழ்நாடு முழுக்க தடுப்பணைகள், தமிழ்நாடு முழுக்க கூட்டு குடிநீர் திட்டங்கள், வியக்கத்தக்க பிரம்மாண்ட பாலங்கள், தமிழ்நாடு முழுக்க குடிமராமத்து பணிகள், கொரோனா பேரிடரை எதிர்கொண்ட விதம், வெள்ளம் வறட்சி என இயற்கை பேரிடரை எதிர்கொண்ட விதம், எதிர்க்கட்சிகளை சமாளித்த விதம், தேர்தல் ஆணையத்தை எதிர்கொண்டது, மத்திய அரசை சமாளித்தது என குறுகிய காலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தந்துவிட்ட பிறகு தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அன்றைக்கு அவர் ராஜினாமா செய்வதற்கு இன்று தமிழகம் படும் பாடுதான் அவருடைய அருமையை தெரிந்து கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்திருக்கிறது
அண்ணாமலை அழகாக பேசுகிறார்,சீமான் சீரும் சிங்கமே கர்ஜிக்கிறார்,அன்புமணி திமுகவுக்கு பக்கபலமாக இருக்கிறார்,மீடியா முழுக்க திமுகவசம் இருக்கிறது இப்படி யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், ஜனநாயக நாட்டில் அவரவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கருத்துரிமை அது.
ஆண்ட கட்சியான அதிமுகவுக்கு தெரியும் திமுகவுக்கு எப்போது வேட்டு வைக்க வேண்டும் என்று
எனவே எழுதி வைத்துக்கொள்ளுங்கள்...
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் மீண்டும் தமிழகத்தில் அமையப் போகிறது, அதுவும் சாதாரண வெற்றியல்ல மிகப்பெரிய பெரும்பான்மை பலத்துடன், அசுர பலத்தில் தமிழகத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட திமுக இல்லாத நிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவருவார்,
கருத்துகள்
கருத்துரையிடுக