எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தந்தி தொலைகாட்சி நேர்காணலின் சுருக்கம்.

புரட்சித் தலைமகன் கழக ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கை நாயகன் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் தந்தி தொலைகாட்சி நேர்காணலின் சுருக்கம்.

கேள்வி: அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு காரணம் என்ன என்று இதுவரை அதிமுக செய்தது என்ன?

பதில்: அதிமுக பல இன்னல்கள் பல இடையூறுகளை கடந்து, மேலும் 10 வருடம் ஆட்சியில் இருந்தது. இருப்பினும் அதிமுக கடந்த சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற்றுள்ளது. மக்கள் காலம் காலமாக மாறி மாறி தான் வெற்றியை தந்துள்ளனர். மேலும் திமுக பல கவர்ச்சிகரமான நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி பெற்ற வெற்றி தான் இது. இதில் இருந்து மீண்டு வருவோம். வெற்றி பெறுவோம்.

குறிக்கீடு: கவர்ச்சிகரமான நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் என்று எதை குறிப்பிடுகிறீர்கள்?

பதில்: பெண்களுக்கு மாதம் ₹1000 குடும்ப அட்டைகள் அனைத்துக்கும் தருவோம் என்றார்கள், கல்வி கடன் தள்ளுபடி, காஸ் ₹100 மானியம், போன்ற முக்கியமான வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் இந்த ஆட்சியின் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி இருக்கின்றனர்.

குறுக்கீடு: எப்படி ₹1000 மாதம் சாத்தியமில்லை எங்கின்றீர்கள்??

பதில்: ₹1000 மாதம் ஆயிரம் என்றால் 2.5 கோடி குடும்ப அட்டைதாரர்கள் இருக்கின்றனர் அவர்களுக்கு மாதா மாதம் என்றால் கொடுப்பது இந்த அரசால் முடியாதது.

குறுக்கீடு: அதிமுக ₹1500 தருவோம் என்றீர்கள் தானே??


பதில்: நாங்கள் வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்றுவோம். நாங்கள் எதையும் செய்ய கூடியவர்கள். (எங்களிடம் ஆட்சியை மக்கள் கொடுத்தால் செய்து காட்டுவோம் என்பது இதன் பதில்.)

குறிக்கீடு: நீங்களும் அனைவருக்கும் ஸ்மார்ட்போன் தருவோம் என்றீர்கள், ஆனால் தர வில்லையே.

பதில்: தற்போது அனைவரிடமும் smartphone இருக்கிறது. அதை தருவது அவசியம் இல்லாமல் போனது. மேலும் நாங்கள் 90-95% வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். சொல்லாத நிறைய வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். குறிப்பாக: 11 அரசு மருத்துவ கல்லூரிகள், 6 அரசு சட்ட கல்லூரிகள், இந்தியாவிலேயே மிகப் பெரிய கால்நடை பூங்கா, அதிக்கடவு அவினாசி திட்டம், நிறைய தடுப்பணைகள், குடிமராமத்து திட்டம் என்று சொல்லி கொண்டே செல்லலாம். இதை நாங்கள் சொல்லவில்லை ஆனால் செய்துக் காட்டினோம். அதிமுக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு 25% வாக்குகள் பெற்றிருக்கிறோம். திமுக 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்து வெறும் 44% வாக்குகள் தான் பெற்றுள்ளது. திமுகவுக்கு தனித்து தேர்தலை சந்திக்கும் திராணி துளியும் இல்லை.

கேள்வி: நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் அவர்களின் நிலை பற்றி?

பதில்: நீட்டை பொறுத்தவரை திமுக ஆட்சியில் இருக்கும் போது 2010 தான் இதை கொண்டு வந்தார்கள். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ், குலாப் நபி ஆசாத் தான் இதை கொண்டு வந்தார். மேலும் திமுக உறுப்பினர் தான் இணை அமைச்சராக இருந்தார்.அப்போது நீட்டை எதிர்த்த ஒரே கட்சி அதிமுக மட்டுமே. திமுக ஒரு சந்தர்ப்பவாத கட்சி. ஆட்சியில் இல்லாத போது ஒரு மாதிரியும் ஆட்சியில் இருக்கும் வேறு மாதிரியும் நடக்கும் கட்சி. ஆனால் அதிமுக எப்போதும் ஒரே நிலைப்பாடு, நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டுக்கு தேவை இல்லாதது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதற்கு முழு பொறுப்பு திமுக தான். மேலும் ஆளுநர் விவகாரங்களில் நாம் தலையிட முடியாது. ஆளுநரை விமர்சனம் செய்ய முடியாது.

குறுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பை கூட விமர்சிக்கலாம் தானே?

பதில்: தீர்ப்பை விமர்சிக்கலாம், நீதிபதியை விமர்சிக்க முடியாது. ஆளுநர் இன்னும் தீர்பே சொல்லவில்லையே. இதில் சட்டசிக்கல் இருப்பதாக விளக்கம் கேட்கிறார். அதை திமுக சரியாக விளக்கம் கொடுக்காமல், அவர் மீது தனிப்பட்ட விமர்சனம் செய்வது தேவையில்லாதது.

குறிக்கீடு: ஆளுநர் நீட் மசோதாவை குறைந்தபட்சம் குடியரசுத் தலைவருக்கு கூட அனுப்பாமல் இருப்பதை பற்றி நீங்கள் பேசவில்லையே?

பதில்: இது அனைத்து மாநிலங்களிலும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. நாம் மட்டுமே இதை எதிர்க்கிறோம். உச்ச நீதிமன்றமே நமக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனால் இதை ஆளுநர் தான் முடிவு செய்ய முடியும். எல்லாவற்றையும் விமர்சிக்க முடியாது. அழுத்தம் தான் கொடுக்க முடியும். அதை செய்யும் அளவு திமுகவுக்கு திராணி இருக்கிறதா என்பதே இங்கே கேள்வி.

குறுக்கீடு: அப்ப நீட் விலக்கு சாத்தியமில்லை என்றீர்களா?

பதில்: திமுக பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றி சாத்தியமில்லாத இதை போன்ற வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளது.

குறுக்கீடு: நீங்களும் தானே நீட் விலக்கு என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்கள்.

பதில்: எப்போதும் அதிமுக நீட் தேர்வுக்கு எதிராகவே இருக்கும். இப்போதும் திமுக கொண்டு வந்த மசோதாவுக்கு நாங்கள் ஆதரவு தான் கொடுத்தோம். இது எங்கள் முடிவு. இந்த தேர்வை நிறுத்த திமுக எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் அதிமுக துணை நிற்கும். ஆனால் திமுகவை போன்று பொய்யை சொல்லி ஏமாற்றாது.

கேள்வி: அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கேட்கிறார்களே?

பதில் கேள்வி: யார் கேட்கிறார்கள்?

நெறியாளர் பதில்: விமர்சகர்கள்.

பதில்: அதிமுக ஒரு தொண்டர்களின் கட்சி. இங்கு திமுகவை போன்று கருணாநிதி, அவரின் மகன் ஸ்டாலின், அவரின் மகன் உதயா நிதி என்று சொல்ல குடும்ப கட்சி கிடையாது. அடுத்து தொண்டர்களில் ஒருவர் தலைமை பொறுப்புக்கு வர முடியும். தொண்டர்கள் என்ன நினைக்கின்றனர் என்பது மட்டும் தான் அதிமுகவில் பெரிது. அதிமுகவில் நாங்கள் (ஒருங்கிணைப்பாளர்கள்), நிர்வாகிகள் மற்றும் ஒன்றரை கோடி தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. 

கேள்வி: இளையராஜா மோடி அவர்களை அம்பேத்கர் அவர்களோடு ஒப்பீடு பற்றிய உங்களின் கருத்து.

பதில்: இது ஜனநாயக நாடு. கருத்து கூற அனைவருக்கும் உரிமை இருக்கிறது. கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொருந்தும். அது அவரின் கருத்து. இதில் நான் கருத்து கூற எதுவும் இல்லை. 

கேள்வி: அமித்ஷா அவர்கள் ஹிந்தி மொழி தான் இணைப்பு மொழி என்று சொன்னது பற்றி நீங்கள் எந்த கருத்தையும் சொல்லவில்லையே.

பதில்: இதற்கு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தெளிவாக விளக்கம் அளித்து விட்டார். அவரின் கருத்தே அதிமுகவின் கருத்து.

குறுக்கீடு: நீங்கள் எதுவும் பதிவிடவில்லையே. 

பதில்: கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் என்னுடைய கருத்தும் இரண்டுமே கட்சியின் கருத்து தான். நாங்கள் சில நேரங்களில் ஒன்றாக சில நேரங்களில் தனித்தனியாக கருத்து கூறுவோம். ஆனால் இருவரின் கருத்தும் கட்சியின் கருத்தே.

கேள்வி: திமுகவின் RS பாரதி, பாஜக தான் எங்களுக்கு எதிரி அதிமுக எங்களுக்கு பங்காளி என்கிறாரே?

பதில்: திமுக ஒரு சந்தர்ப்பவாத கட்சி. அவர்கள் எப்போதும் இப்படி தான் செய்வார். அவர்கள் அதிமுகவை பலவீனம் செய்ய இப்படி பேசுகிறார்கள். ஆனால் அது ஒரு போதும் நடக்காது. அவர்கள் இதில் தோற்றுப்போவார்கள். எங்கள் கட்சியின் தலைவர்கள் மீது பொய் வழக்கு தொடுப்பது, அதனால் அவர்களை கட்சிப் பணி செய்யவிடாமல் தடுப்பது என பழிவாங்கும் அரசியல் மட்டுமே செய்து வருகின்றனர். நாங்கள் இதை மக்களின் உதவியோடு வென்று காட்டுவோம். மேலும் திமுக என்பது எங்களை பொறுத்தவரை தீயசக்தி.

குறிக்கீடு: பாஜகவும் நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்கிறார்களே?

பதில்: ஒவ்வொரு கட்சிக்கும் அவர்களின் கட்சியை வளர்க்க உரிமையுள்ளது. எந்த ஒரு கட்சியும் தன் கட்சியை வளர்க்க என்ன பேச வேண்டுமோ அதை தான் செய்வார்கள். அது ஜனநாயகம். 

குறிக்கீடு: பாஜகவுடன் 2024 தேர்தலில் கூட்டணி மீண்டும் இருக்குமா?

பதில்: அது அப்போது தான் முடிவு செய்யப்படும். அது காலத்தின் சூழலை பொறுத்து முடிவு எடுக்கப்படும். தற்போதே எதையும் சொல்ல முடியாது.

(குறிப்பு: இவை அனைத்தும் துண்டு சீட்டு இல்லாமல் Teleprompter என்னும் கருவியின் உதவி இல்லாமல் நெறியாளர் கேட்ட கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் கூறியது)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?