தேசிய மாடலா திராவிட மாடலான்னு நியூஸ்18 விவாதம் ஆனால் இருவரும் பேசியது அதிமுகவின் தமிழ்நாடு மாடலை
தேசிய மாடலா திராவிட மாடலான்னு நியூஸ்18 விவாதம் ல இந்தப் பக்கம் மூனு, அந்தப்பக்கம் மூனுன்னு மொத்தம் ஆறு பேர் பேசினாங்க.
பொறுமையா கேட்டேன்.
திராவிடம் சாதித்தது இது, தேசியம் சாதித்தது இதுன்னு 6 பேரும் போட்ட பட்டியல் எல்லாமே,
இட ஒதுக்கீட்டுல ஆரம்பிச்சி, சத்துணவு வழியா போயி, கல்விப்புரட்சில நின்னு, தொழிற்புரட்சில உயர்ந்து, பொருளாதார முன்னேற்றம்ன்னு சொன்ன அத்தனையுமே அண்ணாதிமுகவின் சாதனைகள் தான்.
தேசியமாடல் பேசியவர்களின் மோடி உதவித் தொகை தந்தார், மானியம் தந்தார், மின்சார இலக்குன்னு உருட்டினார்கள்.1980 களிலேயே ஒருவீடு ஒரு விளக்கு திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த குடிசைக்கும் ஒளிவிளக்கேற்றிய தமிழகத்தின் ஒப்பற்ற ஒரு இயக்கம் எதுவென்றால் என் அண்ணாதிமுக என்ற எங்கள் மாபெரும் இயக்கமென்று, நெஞ்சை நிமித்திச் சொல்லுவான் அண்ணாதிமுக காரன்.
இந்த மானியம் உதவித்தொகையை லாம் 1980 களிலேயே வேலை கிடைக்காத படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும் வரை உதவித்தொகை, கணவனை இழந்த பெண்களுக்கு உதவித் தொகைன்னு என் தங்கதலைவன் பொன்மனச் செம்மல் புரட்சிதலைவர் அன்றைக்கே அகில உலகத்தின் அழுகுரல்களைக் கேட்டு ஆதரவுக்கரம் நீட்டிவிட்டுவிட்டார்.
எங்கள் தலைவனும் தலைவியும் செய்யாத ஒரே ஒரு திட்டத்தைக் கூட இந்திய அளவிலும் சரி, தமிழ்நாட்டில் திமுகவும் சரி செய்யவே முடியாது.
எந்தப் புதிய திட்டத்தை யோசித்துத் துவக்கினாலும் அந்தத் திட்டத்தைப் பற்றிய ஆய்வை, ஆரம்பப் புள்ளியை, எங்கள் அண்ணாதிமுகவே நடத்தியிருக்கும். இது தான் அண்ணாதிமுக மாடல். அண்ணாவின் மாடல். புரட்சித்தலைவர் மாடல். அம்மா மாடல். நம் தமிழ்நாடு மாடல்.
திராவிட மாடல் என்ற திமுகவின் உருட்டெல்லாம் வெறும் அரசியல் சொல்லாடல் மட்டும் தான்.
அதிமுகவைத் தவிர்த்துவிட்டு தன்னந்தனியாக திமுக கிழித்த ஒரே ஒரு பெரிய சாதனையைச் சொல்ல வக்கற்ற கேடுகெட்ட அயோக்கிய திமுக கட்சி, அண்ணாதிமுகவின் சாதனையை எல்லாம் தன் பெயருக்கு மாற்றி எழுதி பச்சை அயோக்கியத்தன வேலையை செய்கிறது. கழகத்தின் ரத்தத்தின் ரத்தங்கள் திருப்பி அடிக்க ஆரம்பித்தால், திமுக உருவாக்கிய போலி திராவிட, போலி சாதனை மாளிகை எல்லாம் சல்லி சல்லியா உடைக்கப்பட்டுவிடும்.
காலம் கனிந்துவிட்டது.
காட்டுமிராண்டிக் கூட்டத்தின் ஓட்டுப்பொறுக்கும் தந்திர வேலைகளை எல்லாம் ஒட்டுமொத்தமாய் உடைத்தெறிந்து விடை தருவோம்.
கழகத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டு, மீண்டும் கோட்டையைக் கைப்பற்றி புரட்சித்தலைவின் சத்திய வார்த்தைகளுக்கு சரித்திரத்தையே சாட்சிகளாக்குவோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக