அண்ணாவைப் பற்றி பேசுவதற்கு, ஸ்டாலின் திமுகவிற்கு ஏதேனும் அருகதையிருக்கிறதா..?
ஒரு முறை இரண்டு முறை அல்ல, 11 முறை சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட மிக மூத்த அரசியல்வாதி KKSSR அவர்கள்
1977,80,84,89,91,96 - அண்ணாதிமுக சார்பில் 6 முறை
2001,06,11,16,2021 - திமுக சார்பில் 5 முறை
11 இல் ஒன்பது முறை வெற்றி பெற்றவர்.
புரட்சித்தலைவர் அமைச்சரவையிலேயே பொதுப்பணி துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தவர்
அப்படிப்பட்டவரே இன்றைக்கு திமுகவிற்கு சென்றதும் கொத்தடிமையாக்கப்பட்டுள்ளார் எனில் திமுகவின் ஜனநாயக லட்சணத்தைப் பாருங்கள்
அண்ணா தொடங்கிய அற்புதமான ஜனநாயக இயக்கத்தின் இன்றைய நிலையை எண்ணிப் பாருங்கள்
அண்ணாதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை என்றும், அண்ணாதிமுகவின் அடுத்த தலைமை தன் குடும்பத்திலிருந்து வரமாட்டார்கள் என்றும் பட்டவர்த்தனமாய் அறிவித்து, அண்ணாவின் கொள்கையை செயல்படுத்தி, இளைஞர்களை அழைக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எங்கே..?
தன்னைப் புகழ வேண்டாம், தன் மகனை புகழ்ந்து தள்ளுங்கள் என அமைச்சர்களைக் கட்டாயப் படுத்தி அட்டூழியம் செய்து அண்ணாவின் அரசியல் அடிப்படையையே சிதைக்கும் திமுகவின் ஸ்டாலின் எங்கே..?
அண்ணாதிமுக தான் தமிழர்களின் ஒரே நண்பன். அண்ணாதிமுக என்கிற ஒரே இயக்கம் தான் அண்ணாவின் அடிப்படை கொள்கைகளை கடைபிடிக்கும் ஒரே இயக்கம்.
தமிழ்நாட்டு அரசியலுக்கு உகந்த கொள்கையை கடைபிடிக்கும் ஒரே இயக்கம் அண்ணாதிமுக தான்.
ஸ்டாலின் குடும்பத்துக்கு கொத்தடிமையாய் இருந்தால் அல்லது இருப்பது பிடித்தால் திமுகவில் பொறுப்பு பெறலாம்.
கொத்தடிமை பிழைப்பு பிழைப்பதற்கு வேறு தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம்.
மானெங்கெட்ட கூட்டமெல்லாம் ஈனங்கெட்டு சுயமரியாதை பேசுகிறது. காலத்தின் கோலம்.
ஸ்டாலினும் மற்ற நிர்வாகிகளும், சுயமரியாதைக் கொள்கை என எப்போது பேசினாலும், தமிழக மக்கள் காரி முகத்தில் அல்லவா உமிழ்வார்கள்?
மானெங்கெட்டு மண்டியிட்டு கிடப்பவரெல்லாம் சுயமரியாதைப் பற்றி பேசுவது வெட்கக்கேடல்லவா?
அண்ணாவைப் பற்றி பேசுவதற்கு, ஸ்டாலின் திமுகவிற்கு ஏதேனும் அருகதையிருக்கிறதா..?
கருத்துகள்
கருத்துரையிடுக