என்ன செய்தார் அம்மா அவருக்கு போய் 80 கோடி செலவில் நினைவிடம் அமைக்க???? ஒன்றா இரண்டா... 2035 இல் பெற வேண்டிய பெண்கள் முன்னேற்றத்தை 2021இல் அம்மாவின் அரசு எப்படி சாத்தியப் படுத்தியது என்று சொல்லும் அளவுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசு எண்ணில் அடங்கா திட்டங்களை தீட்டி நடைமுறைப் படுத்தியுள்ளது... 1. பெண்களின் வேலை பளுவை குறைக்க மிக்சி, கிரைண்டர் இலவசமாக கொடுத்து அவர்களை பழக்கப் படுத்திய அரசு அம்மாவின் அரசு, 2. உள்ளாட்சி அமைப்பில் 50% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்த அரசு அம்மாவின் அரசு, 3. அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நாப்கின் இலவசமாக வழங்கிய அரசு அம்மாவின் அரசு, 4. வேலைக்கு போகும் பெண்களுக்கு 50% மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கும் அரசு அம்மாவின் அரசு, 5. படித்த பட்டதாரி மாணவிகளுக்கு தாலிக்கு தங்கம், 50 ஆயிரம் வரை கல்யாண பணம் வழங்கும் அரசு அம்மாவின் அரசு, 6. வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து தாய் மார்கள் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பிறகு இரண்டு பெண் குழந்தைகள் பெயரிலும் தலா 1 லட்சம் நீண்ட கால வைப்பு நிதி ஒதுக்கீடு செய்து, அவர்களின் மேல் படிப்புக்கு க...