இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புரட்சி தலைவி அம்மாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு அம்மா அளித்த முத்தான 74 திட்டங்கள்

படம்
புரட்சி தலைவி அம்மாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு அம்மா அளித்த முத்தான 74 திட்டங்கள்...... 1)பெண் சிசுக் கொலைகளை தடுக்க தொட்டில் குழந்தைகள் திட்டம். 2)மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கம். 3)பெண்களின் பிரச்னைகளை தீர்க்க மகளிர் காவல் நிலையங்கள். 4)இளம்பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம். 5)விலையில்லா அரிசி. 6)குறைந்த விலையில் அம்மா குடிநீர். 7)பள்ளிகளில் இலவச கல்வி உபகரணங்கள். 8)கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம். 9)அம்மா உணவகங்கள். 10)பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி. 11)விலையில்லா பாடப் புத்தகங்கள். 12)முதியோர் உதவித்தொகை ரூ.1,000-ஆக உயர்வு. 13)மக்கள் குறைகளை தீர்க்க அம்மா அழைப்பு மையம். 14)அம்மா திட்ட முகாம்கள். 15)ஏழை கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு. 16)பிரசித்தி பெற்ற கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம். 17)விலையில்லா மிக்ஸி. 18)விலையில்லா கிரைண்டர். 19) விலையில்லா மின்விசிறி. 20)மாணவர்களுக்கு இலவச காலணிகள் கல்வி உபகரணங்கள். 21) முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியை உறுபடுத்தியது. 22)மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம். 23)அம்மா பூங்காக்கள்...

OBC 27% இடஒதுக்கீடு வழக்கு தொடுத்தது அதிமுக & அதிமுக அரசு...

படம்
OBC 27% இடஒதுக்கீடு வழக்கு தொடுத்தது அதிமுக & அதிமுக அரசு, தொடர்ந்து நடத்தியது அதிமுக & அதிமுக அரசு, கூடுதல் மனுதாரராக இடைப்பட்ட காலத்தில் தன்னை இணைத்து கொண்டது திமுக. அதிமுக ஏறக்குறைய 90% வாதங்களை முன்வைத்து இருந்தது. மத்திய அரசும் எதிர் தரப்பு நியாயத்தை ஏற்று இந்த ஒதிகீடுக்கு ஒப்புதல் தெரிவித்து அதை சட்டமாக்க ஒப்புக் கொண்டது.  இடையில் ஆட்சியை பிடித்த திமுக , தற்போது வெட்கமே இல்லாமல் தன் அரசு தான் பெற்று கொடுத்தது என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறது.  இறுதி விசாரணை (Final Hearing) மட்டுமே இந்த அரசு பதவி ஏற்று நடந்தது என்பது முக்கியமான ஒன்று. மேலும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுக்கு படித்த முட்டாள்களை பதவி ஆசை காட்டியும், பெரியார் போராளிகள் என்று சொல்லிக் கொண்டு அவரின் கோட்பாடுகளுக்கு எதிராக திமுகவுக்கு சொம்பு தூக்கும் பொய்யர்களை வைத்தும் திரும்ப திரும்ப இந்த பொய்யை வெட்கமே இல்லாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறது. இது புதிதல்ல, எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்த போது பொது தேர்தல் வந்தது அப்போது பொய்யின் தந்தை கலைஞர், திமுகவுக்கு ஓட்டு போ...

அண்ணாதிமுக சந்திக்காத விமர்சனங்களா..?

படம்
சேலம் மாவட்டம் கெங்கவள்ளியில் ஒன்றிய  கவுன்சிலர் தேர்தலில் 9 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் திமுக ஜெயித்துவிடுகிறது. ஆமாம் இலை தோற்றுவிட்டது.  உடனே அதிமுகவினர் கூட்டமாகச் சென்று, அன்றைய முதலமைச்சர் திரு EPS அவர்களிடம், ஓட்டு வித்தியாசம் ரொம்ப கம்மி ங்ணா, மறுபடியும் எண்ணச் சொல்வோம் முடிந்தால் மாற்றி அறிவிக்க வைக்கலாம் (அதாவுது திமுக formula) எனச் சொல்கின்றனர்.  ஏறெடுத்துப் பார்த்துவிட்டு எடப்பாடியார் சொன்னது, நம்ம ஆளுங்க கிட்ட, அந்த பகுதில இன்னும் கொஞ்சம் மக்கள் செல்வாக்கு பெறுகிற அளவுக்கு உழைக்கச் சொல்லுங்க. சூரியன் வென்றதாகத் தான் அறிவிப்பு வரணும்.  இது தான் எடப்பாடி பழனிசாமி என்கிற ஜனநாயகவாதியின் உண்மை முகம்.  நிற்க.  மேற்குவங்கம் போல முடக்குவோம்ன்னு திரு. EPS அவர்கள் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.  எதோ EPS சொல்லிட்டா ஆளுநர் ஒடனே திமுக ஆட்சியைக் கவிழ்த்து விடுவார் என்பது போலவும், அப்படி கவிழ்த்துவிட முடியும் என்பது போலவும் பதில் தாக்குதல்கள் பறக்கிறது. EPS பேசிய பேச்சின் சாரம், திமுக அராஜகங்களை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது, வேட்புமனு தள்ளுபடி, வே...

திமுக கடைசியாக மூக்குடைப்பட்டது ரோசய்யாவிடம்தான்

படம்
மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு நடந்துகொண்டிருந்த காலகட்டம் (2011) தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட தேமுதிகவிடம் பறிகொடுத்து சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது கட்சியாக படுதோல்வியடைந்திருந்தது. ஆளும் அதிமுக அரசிற்கு குடைச்சல் கொடுக்க கருணாநிதியின் பரிந்துரையின்பேரில் ரோசய்யாவை தமிழக ஆளுநராக நியமித்தது மன்மோகன் சிங் அரசு. ( 2011 ஆகஸ்ட்) தமிழ்நாட்டிற்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே அதிமுக அரசுடன் இணைந்து இனக்கமாக செயல்பட தொடங்கினார் ரோசய்யா. இந்த எதிர்பாராத டுவிஸ்ட்டை கருணாநிதியே எதிர்ப்பார்த்திருக்கவில்லை. தற்போது ஆளுநர் ரவிக்கு எதிராக ஸ்டாலின் ஆள் வைத்து முரசொலியில் எழுதிவரும் 'கொக்கென கோண வாயா, நக்கென நாராவாயா' பாணியில் கருணாநிதி தனக்குத்தானே கேள்வி பதில் என்ற பெயரில் முரசொலியில் ரோசய்யாவை கழுவி ஊற்றினார். ரோசய்யாவை திரும்பப் பெறக்கோரி சோனியாவிற்கு தொடர்ச்சியாக கடிதங்களாக எழுதித்தள்ளினார். அப்போது 2G உரசல்கள் திமுக காங்கிரஸ் இடையே விஸ்வரூபம் எடுத்திருந்த காலகட்டம் என்பதால் சோனியா பெரிதாக கண்டுகொள்ளவில்லை. கடைசிவரை ரோசய்யாவை கரித்துக்கொட்டிக் கொண்டி...