OBC 27% இடஒதுக்கீடு வழக்கு தொடுத்தது அதிமுக & அதிமுக அரசு...

OBC 27% இடஒதுக்கீடு வழக்கு தொடுத்தது அதிமுக & அதிமுக அரசு, தொடர்ந்து நடத்தியது அதிமுக & அதிமுக அரசு, கூடுதல் மனுதாரராக இடைப்பட்ட காலத்தில் தன்னை இணைத்து கொண்டது திமுக. அதிமுக ஏறக்குறைய 90% வாதங்களை முன்வைத்து இருந்தது.

மத்திய அரசும் எதிர் தரப்பு நியாயத்தை ஏற்று இந்த ஒதிகீடுக்கு ஒப்புதல் தெரிவித்து அதை சட்டமாக்க ஒப்புக் கொண்டது. 
இடையில் ஆட்சியை பிடித்த திமுக , தற்போது வெட்கமே இல்லாமல் தன் அரசு தான் பெற்று கொடுத்தது என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. 

இறுதி விசாரணை (Final Hearing) மட்டுமே இந்த அரசு பதவி ஏற்று நடந்தது என்பது முக்கியமான ஒன்று.

மேலும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுக்கு படித்த முட்டாள்களை பதவி ஆசை காட்டியும், பெரியார் போராளிகள் என்று சொல்லிக் கொண்டு அவரின் கோட்பாடுகளுக்கு எதிராக திமுகவுக்கு சொம்பு தூக்கும் பொய்யர்களை வைத்தும் திரும்ப திரும்ப இந்த பொய்யை வெட்கமே இல்லாமல் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

இது புதிதல்ல, எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்த போது பொது தேர்தல் வந்தது அப்போது பொய்யின் தந்தை கலைஞர், திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் #MGR திரும்ப வந்தவுடன் இந்த ஆட்சியை அவரிடமே திரும்ப ஒப்படைத்து விடுவேன் என்று சொல்லி தேர்தல் பிரச்சாரம் செய்தவர்கள் இந்த பொய்யர்கள்.

எவ்வளவு கேவலமாக மக்களை ஏமாற்ற முடியுமோ அவ்வளவு கேவலமாக ஏமாற்றும் வல்லமை கொண்டவர்கள் இவர்கள். அதை எதிர் கொள்ளும் திராணி ஒருகினைப்பாளர்களுக்கு இருக்கிறது. அதற்கு நாமும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். தொடர்ந்து திமுகவின் இந்த பித்தலாட்டதை மக்களுக்கு எடுத்து சொல்லி கொண்டே இருப்போம்.

எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க
அம்மா நாமம் ஓங்குக

என்றும் அதிமுக எப்போதும் அதிமுக மட்டுமே மக்களுக்கான இயக்கம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?