அண்ணாதிமுக சந்திக்காத விமர்சனங்களா..?
சேலம் மாவட்டம் கெங்கவள்ளியில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 9 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் திமுக ஜெயித்துவிடுகிறது. ஆமாம் இலை தோற்றுவிட்டது.
உடனே அதிமுகவினர் கூட்டமாகச் சென்று, அன்றைய முதலமைச்சர் திரு EPS அவர்களிடம், ஓட்டு வித்தியாசம் ரொம்ப கம்மி ங்ணா, மறுபடியும் எண்ணச் சொல்வோம் முடிந்தால் மாற்றி அறிவிக்க வைக்கலாம் (அதாவுது திமுக formula) எனச் சொல்கின்றனர்.
ஏறெடுத்துப் பார்த்துவிட்டு எடப்பாடியார் சொன்னது,
நம்ம ஆளுங்க கிட்ட, அந்த பகுதில இன்னும் கொஞ்சம் மக்கள் செல்வாக்கு பெறுகிற அளவுக்கு உழைக்கச் சொல்லுங்க. சூரியன் வென்றதாகத் தான் அறிவிப்பு வரணும்.
இது தான் எடப்பாடி பழனிசாமி என்கிற ஜனநாயகவாதியின் உண்மை முகம்.
நிற்க.
மேற்குவங்கம் போல முடக்குவோம்ன்னு திரு. EPS அவர்கள் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
எதோ EPS சொல்லிட்டா ஆளுநர் ஒடனே திமுக ஆட்சியைக் கவிழ்த்து விடுவார் என்பது போலவும், அப்படி கவிழ்த்துவிட முடியும் என்பது போலவும் பதில் தாக்குதல்கள் பறக்கிறது.
EPS பேசிய பேச்சின் சாரம், திமுக அராஜகங்களை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது, வேட்புமனு தள்ளுபடி, வேட்பாளரை மிரட்டி வாபஸ் வாங்க வைத்தது, மிரண்டு போன அதிமுக வேட்பாளர் தற்கொலை செய்து கொள்ளுமளவு திமுக அட்டூழியங்களை தேர்தல் களத்தில் செய்வது கண்டு இனி துளியும் பயப்பட மாட்டோம், சட்டமன்றத்தையே முடக்குவோம் என்று தான்.
WB யில் நடந்த நிகழ்வை பத்திரிக்கைகள் திரித்து வெளியிட்ட செய்தியின் தாக்கம், வங்கம் என்ற பெயரையும் சேர்த்து சொல்லிவிட்டார். அவ்வளவு தான். இதில் எந்த சர்ச்சையையும் மனதில் வைத்தே வேண்டுமென்றே பேசியதாக எமக்குத் தோன்றவில்லை.
அவர் திமுகவின் அட்டூழியங்களைக் கண்டித்து சட்டமன்றத்தை முடக்குவோம் எனப் பொருள்படும் படி தான் பேசியிருப்பதாகத் தான் நான் பார்க்கிறேன்.
ஜனநாயக வழியிலேயே திமுகவை வீழ்த்தும் வல்லமையும் வாய்ப்பும் ஒருங்கே பெற்ற கட்சி அண்ணாதிமுக. எடப்பாடி பழனிசாமி அவர்களும் அண்ணாதிமுகவின் வழி தவிர வேறொரு வழியில் பயணிக்கவும் விரும்ப மாட்டார்.
அதற்குள் எதோ மேற்கு வங்கத்தில் ஆளுநரால் அறங்கேற்றப்படும் ஜனநாயக படுகொலையை அதிமுக ஆதரித்துப் பேசியது போன்ற ஒரு பொய்த் தோற்றத்தை வழக்கம் போல ஏற்படுத்தி விட்டன ஊடகங்களும் விமர்சனதாரர்களும்.
அப்படியே வார்த்தைகள் வந்திருந்தாலுமே கூட அது உதட்டு வார்த்தைகளேயன்றி, உள்ளத்து நிலைப்பாடாகி விடாது என்று எம்மால் அறுதியிட்டு உறுதியாய் சொல்ல முடியும்.
ஆளுநரை எதிர்ப்பது போல, வெளியில் வேடமிட்டுக்கொண்டிருக்கும் திமுகவினருக்கு மத்தியில்,
7.5% இட உள் ஒதுக்கீட்டுக்கு அன்றைய ஆளுநர் ஒப்புதல் தராத போது, பிரிவு 162 ன் படி அரசிதழை தாமாகவே வெளியிட்டு மாநில உரிமையை நிஜத்தில் நிலைநாட்டிய நிஜத்தலைவன் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.
காவிகளை வெளியில் திட்டிவிட்டு, சங்கராச்சியாரை நல்லா கவனிச்சுக்கோனும்ன்னு ஃபோன் போட்டு ஜெயிலரிடம் சொன்ன கருணாநிதியின் வாரிசுகளுக்கு மத்தியில்,
ஆளுநர் தரப்பு அத்துனை அழுத்தம் தந்திட்ட போதும், சூரப்பா என்ற திமிர் பிடித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஷயத்தில், விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை செய்ய துணிச்சலுடன் ஆணையிட்ட ஆண்மைமிக்க தலைவன் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அண்ணாதிமுக, பெரியார் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா இந்த நான்கு தலைவர்களின் பேராசியுடன் அவர்களின் கொள்கை வழியில், இது போன்ற விமர்சனங்களிருந்து வெளியேவந்து, வெற்றியை நோக்கி வீர நடை போடும்.
அண்ணாதிமுக சந்திக்காத விமர்சனங்களா..?
வரட்டும் பார்ப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக