இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அமைச்சரின் ஆணவ பேச்சுக்கு திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் கண்டனம்.

படம்
விழுப்புரம் - மேலமங்கலத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைக்கச் சென்ற மாண்புமிகு அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள், ஊக்கத்தொகை வேண்டி மனு அளிக்க வந்த செய்தியாளர்களை அவமதித்துள்ள செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். மழை,வெள்ளம்,பேரிடர்,பெருந்தொற்று என எக்காலத்திலும் இரவுபகல் பாராமல் தன்னலம் கருதாது செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியாற்றுகின்ற முன்களப் பணியாளர்களான "செய்தியாளர்களை உங்களால் தான் தொற்று பரவுகிறது" என்றுகூறி திரு.பொன்முடி அவர்கள் காயப்படுத்தி அவமதித்துள்ளார். மக்கள் பிரதிநிதியாக முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் சபை நாகரிகம் அறிந்து, மாண்புடன் நடந்து கொள்ள வேண்டும். இனியேனும் மக்களிடம் இதுபோன்று அநாகரிகமாக நடந்து கொள்ளாதவாறு அனைவரையும் அறிவுறுத்தி வைக்க வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். - திரு. ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர், கழக ஒருங்கிணைப்பாளர்.

என்ன தான் செய்து கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்???

படம்
என்ன தான் செய்து கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்??? ஸ்டாலின் பதவி ஏற்று இன்றோடு இருபது நாட்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் இவரின் செயல்கள்யாவும் முன்னரே ஒரு குழுவால் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க வடிவமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நிகழ்வை பத்திரிக்கையாளர்கள் தன் கட்சி நிர்வாகிகள் உதவியுடன் நடத்தும் வேலையை மட்டுமே அதிகம் செய்து வருகிறார். ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதையுமே இதுவரை செய்ய வில்லை என்பதே உண்மை. இது எதிரி கட்சியாக இருக்கும் போது கைகொடுக்கும் ஆனால் இதையே நீங்கள் செய்து வந்தால் தமிழ் மக்கள் தங்கள் வேலையை காட்ட தொடங்குவார்கள் என்பது வரும் தேர்தல்கள் உங்களுக்கு உணர்த்தும். இதுவரை இவர் என்ன செய்து விட்டார் என்று ஆகா ஓகோ என்று ஊடகங்கள் ஊடகவியாளர்கள் சொல்லுகின்றனர் என்று பார்த்தால் ஓர் மிக பெரிய அதிர்ச்சி தான் காத்திருந்தது. ஏன் என்றால் இவர் அடித்த சிக்சர்கள் ( இப்படியே அதிகமாக பத்திரிக்கை நண்பர்கள் அவரின் செயலுக்கு உவமை படுத்தி கூறுகின்றனர்) முன்பே அடித்த சிக்ஸர்கள், நடைமுறையில் இருக்கும் சிக்சர்கள், சாத்தியமில்லாத வெறும் காகித சிக்ஸர்கள், மத்திய அரசை வலியுறுத்தும் சிக்...

நீங்கள் மாறுங்கள் இல்லை மாற்றப் படுவீர்கள்....

படம்
தற்போது இருக்கும் கொரோனா இரண்டாம் அலைக்கு அதிமுக அரசு முதல் அலையிலேயே முற்று புள்ளி வைக்காததே காரணம் என்கிறார் தற்போதைய கையாலாகாத முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள்.  அரசு கிராம சபை கூட்டம் வேண்டாம் என்ற போது. முடியாது நாங்கள் கூட்டியே தீருவோம் என்று அரசியல் செய்து விட்டு இன்று பழியை தூக்கி முந்தைய அரசின் மீது போடுவதா?. அதிமுக அரசு அனுமதி கொடுக்காத திமுக மாநாட்டை காபந்து அரசு ஆனவுடன் வேக வேகமாக கூட்டி பல லட்சம் தமிழ் மக்களை ஒன்று கூட்டி (காசுக்கு கூட்டம் கூட்டுவது தான் தமிழ்நாட்டின் வழக்கம், அது யாராக இருந்தாலும் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய விடயம்) கொரோனா பரவலை அதிகரித்த பெருமை திரு. அப்போதைய எதிரி கட்சி தலைவரை தான் சாரும்.  ஏன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் கூட்டம் கூட்ட வில்லையா என கேட்கும் சில தற்குறிகளுக்கு ஒரு விளக்கம். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொகுதி வாரியாக பிரச்சாரம் செய்தார். அந்த தொகுதி மக்கள் மட்டுமே ஒன்று கூடினர். ஆனால் ஸ்டாலின் ஒரே இடத்தில் 10 தொகுதி மக்களை ஒரே இடத்தில் கூட்டி பிரச்சாரம் செய்தார். மேலும் திருச்சியில் நடந்த அந்த மாநாட்டில் தமிழ் ...

என்ன செய்ய வேண்டும் TTV தினகரன்? அவரால் இனி யாருக்காவது லாபம் உண்டா? (பகுதி 2)

படம்
பகுதி 1 படிக்க:  http://admk4ever.blogspot.com/2021/05/ttv.html TTV தினகரன் திமுகவுடன் கள்ள உறவு வைத்து கொண்டு 10.5% வன்னியர் இட ஒதுக்கீடுக்கு எதிராக தென் மாவட்டங்களில் இவர் பிரச்சாரம் செய்த காரணங்களால் அதிமுக பெரும்பான்மை இடங்களில் தோல்வி அடைந்தது. இது இவர் இவரை சார்ந்திருக்கும் அதிமுகவை மீட்டு விடுவார் என்று நம்பி இவர் கூட இருந்தவர்களுக்கு இவர் செய்த பச்சை துரோகம். ஆம், இன்றும் அதிமுக அமைச்சரவையில் 8 அமைச்சர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு கிடைத்து வந்தது, அதற்கு அவர்களின் விசுவாசக்கு தான் என்று கொடுக்கப்பட்ட மரியாதை.  Currently People rejected TTV Dhinakaran & AMMK அது இவ்வாறு அந்த சமூக மக்களுக்கு எதிராக அதிமுகவை சித்தரிப்பதன் மூலம் வரும் காலங்களில் அவர்கள் திமுக பக்கம் சென்றால். அது வேறு ஒரு சமூகத்துக்கு கட்டாயம் அந்த தொகுதி சென்றால் உங்களின் பிடியில் இருந்த தொகுதி அந்த சமூகத்தை விட்டு சென்று. பின் நாட்களில் அவர்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போக கூடும். உதாரணம்: சோழிய வெள்ளாளர்கள், முன்பு இவர்கள் தான் 8-10 அமைச்சர்கள் இருந்தனர், தற்போது ஒன்று தான...

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் எதிர்க்கட்சி தலைவராக முதல் செய்தியாளர் சந்திப்பில்

படம்
அதிமுகவை பொறுத்தவரை மக்கள்நலனே முக்கியமானது, 17 அமைப்பு சாரா தொழிலாளர்கள்& 14 நலவாரியங்களை சேர்ந்த 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு,அம்மா ஆட்சியில் வழங்கப்பட்டது போல அத்தியாவசியப்பொருட்கள், உணவுத்தொகுப்பு மற்றும் ருபாய் 2000 நிவாரண உதவியை அரசு உடனே வழங்க வேண்டும். எனது தலைமையிலான அம்மாவின் அரசு வழங்கியதை போன்று ஏழைகள் , மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் , கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் சமூக கூடங்கள் அமைத்து உணவு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. தமிழக அரசு ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்தால் மட்டுமே கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க முடியும். தமிழக அரசு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும் எனது தலைமையிலான அம்மாவின் அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளை தொடர்ச்சியாக தற்போதைய அரசு எடுத்தால் மட்டுமே சமூக பரவலை கட்டுப்படுத்த முடியும். இந்திய அளவில் நோய் தொற்றில் தமிழகம் முதலிடம், உயர்பலிகள் அதிகமாவது மிகவும் வேதனையளிக்கின்றது.  கொரோனா தினசரி பாதிப்பு 35,000 ஆக அதிகரித்துள்ளது ...

என்ன செய்ய வேண்டும் TTV தினகரன்? அவரால் இனி யாருக்காவது லாபம் உண்டா? (பகுதி 1)

படம்
TTV தினகரனை மிக பெரிய ஆளுமை என்று உசுப்பேத்தி வளர்த்தெடுத்த பெருமை முங்களப் பணியாளர்களை தான் சாரும். அதுவும் குறிப்பாக தராசு சியாம், லக்ஷ்மி, சபீர், லட்சுமணன் போன்ற தன்னை நடுநிலை என்று சொல்லி கொள்ளும் ஒரு சிலரின் சுய லாபத்துக்காக ஆசை வார்த்தை காட்டி திமுகவுடன் வாங்கி கொண்டோ வாங்காமலோ அனைத்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் பேசி அவரை 4% வாக்குகளும் குறைவாக வாங்க வைத்து இன்று அவரின் அரசியல் எதிர் காலம் வைகோவை விட கேவலமாக கொண்டு சென்ற பெருமை இவர்களை தான் சாரும். இவரோடு இருப்பவர்கள் கூடிய விரைவில் தாய் கழகமோ அல்லது திமுகவுக்கோ செல்ல தான் போகின்றனர் என்பது மட்டும் 100% நடக்கக் கூடியதே. TTV Dhinakaran spoiler of politics, not shrude politician தொடரும்...

தடுப்பூசியில் திமுக செய்த அரசியலின் விளைவு இன்று தமிழகம் தள்ளாடுகிறது. ஏன்???

படம்
மனிதாபிமானம் உள்ளவர்கள் மனசாட்சியுடன் அரசியலை மறந்து இதை படியுங்கள்.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.. இன்று தமிழகம் சுடுகாடாக மாறி இருக்கிறது என்றால் இதற்கு யார் காரணம்??? நாம் தயாரித்து கொடுத்த கொரோனா தடுப்பூசி 70 நாடுகளுக்கு கொடுக்கப்பட்டு அவர்கள் அதை சரியாக பயன்படுத்தினார்கள்.  ஆனால் தமிழகத்தில் , மோடியே நீ ஏன் தடுப்பூசி போடவில்லை, மக்கள் என்ன பரிசோதனை எலிகளா என்றார் - மருத்துவம் படிக்காமல் மருத்துவராக இருக்கும் திருமாவளவன்! எடப்பாடியும் மோடியும் சேர்ந்து கொரோனா தடுப்பூசியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றார் - ஸ்டாலின்! மோடி போடாமல் மக்கள் மீது மருந்து வியாபாரம் செய்து தனியார் துறையை வளர்க்க மக்களை பலிகடா ஆக்குகிறார்கள் என்றனர் -கம்யூனிஸ்ட்கள்! எதுக்கு தடுப்பூசி அனுமதிக்கு இவ்ளோ அவசரம்ணு நக்கல் செய்தார் -ராகுல்காந்தி! கொரனா தடுப்பூசியின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தாமல் மக்கள் மீது திணிக்க முயற்ச்சி நடக்கிறது என்றார் -கனிமொழி! உலகமே நிராயுதபாணியாக நின்ற போது, தமக்கும் தயாரித்து உலக முழுவதும் தவித்தவர்களையும் பாதுகாக்க முன் வந்தது என் பாரதம்.  ஆனால் இவர...

மூடிக்கிட்டு வேலைப்பாருங்க... உ.பி.க்களே...!

படம்
கருணாநிதிக்கு கூவத்தில் கூட இடம் தர மறுத்த எடப்பாடிக்கு, வீட்டையே ஒதுக்கியுள்ளது திமுக - உபி-க்கள்  பிதற்றல்... எதிர்கட்சி தலைவருக்கு கேபினட் அந்தஸ்த்து உண்டு. அரசு வீடும் உண்டு. இது நாள் வரை, எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்கள் அம்மாவும் கருணாநிதியும் தான். இருவருமே சென்னையைச் சார்ந்தவர்கள் என்பதால், எதிர்க்கட்சி தலைவருக்கு பொதுவா ஒதுக்கப்படும் அரசு வீடு ஒதுக்கப்பட அவசியமில்லாமல் போனது.  ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சி தலைவர் சென்னையைச் சாராதவர் என்பதால், பொதுவாக ஒதுக்கப்படும் வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்ளோ தான். மற்றபடி இதுல, கருணை மழை பொழிந்த திமுக, ஆறடி ஒதுக்காத எடப்பாடிக்கு வீட்டையே ஒதுக்கிய என, அது இதுன்னு உருட்ட இதில் ஒன்றுமேயில்லை.  கொஞ்சமேனும் அரசு நிர்வாகம் பற்றி புரிதலுடன் இருங்கள்.  ஆறு மாதத்திற்கு ஒருமுறை சட்டசபை பதிவேட்டில் கையெழுத்து போடவில்லை என்றால் MLA பதவி பறிபோகும் என்ற விதியை, என் அப்பா கருணாநிதி க்கு மட்டும் தளர்த்தி விலக்கு கொடுத்து, என் அப்பா இறக்கும் போது MLA வாகவாச்சும் இருக்க அனுமதிக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். அன்றைய அண்ணா திமுக ம...