இடுகைகள்

கண்டன பொதுக்கூட்டம்: சேலத்தில் முதலமைச்சர், தேனியில் துணை முதலமைச்சர் பங்கேற்பு

ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு துணை போன திமுக, காங்கிரஸ் கட்சிகளின் துரோகச் செயலை கண்டித்து தேனியில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், சேலத்தில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். பொதுக்கூட்டங்களில் மாவட்ட வாரியாக பேசுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், கழக செய்தி தொடர்பாளர் டாக்டர். வைகை செல்வன் - தேனி, கழக இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - சேலம், கழக அவைத்தலைவர், மதுசூதனன் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் மற்றும் கழக செய்தி தொடர்பாளர் சமரசம் மற்றும் நடிகை மற்றும் பாடகி டி.கே.கலா - திருவள்ளூர். கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் ஊரக தொழிற்துறை அமைச்சர் பென்ஜமின் மற்றும் கழக இலக்கிய அணி துணை செயலாளர் நிர்மலா அருள் பிரகாஷ் - காஞ்சிபுரம், கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் வேளாண் துறை அமைச்சர் துரை...

நியூஸ் ஜெ அறிமுக விழாவில் முதலமைச்சர் எடப்பாடி ஆற்றிய உரை:

படம்
சென்னை,  சென்னையில்  நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் லோகா, இணையதளம் மற்றும் கைப்பேசி செயலியை அறிமுகம் செய்து வைத்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கழக அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் பாலமாக நியூஸ் ஜெ தொலைக்காட்சி அமையும் என தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில்   நியூஸ் ஜெ. தொலைக்காட்சியின் லோகோ, இணையதளம் மற்றும் செயலி தொடக்க விழா நடைபெற்றது. கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் லோகோ மற்றும் கைப்பேசி செயலியை அறிமுகம் செய்து வைத்தனர். முன்னதாக நியூஸ் ஜெ தொலைகாட்சியின் மேலாண் இயக்குநர் சி.வி.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். விழாவில் கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். லோகோ, இணையதளம் மற்றும் கைப்பேசி செயலியை அறிமுகம் செய்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு: – இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அரசு செயல்...

நியூஸ் ஜெ அறிமுக விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

படம்
சென்னை, அம்மாவின் புகழ், கழக அரசின் சாதனைகளை உலகம் முழுவதும் பரவிட செய்வதுடன் தமிழக மக்களுக்கு புதிய அனுபவத்தை நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிச்சயம் அளிக்கும் என்று லோகோ அறிமுக விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ, கைப்பேசி செயலி, வலைதளம் அறிமுக விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆற்றிய உரை வருமாறு:- நாட்டு நடப்புகளை, நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை, அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல், ஆதிகாலம் தொட்டே மனிதனுக்கு அமைந்த குணநலன் ஆகும். மனிதன், தனது சிந்தனையை செயலாக்குகின்ற நாகரிக மனிதனாக மாறத் தொடங்கியதும், ஏன்?, என்ன?, எதற்கு?, எப்படி?, எப்போது?, எங்கே?, எவ்வகையில்?, யார்?, யாரால்?, யாருக்காக?,என்ற பத்து கேள்விகள் அவனைச் சுற்றி சுழன்று வந்தன. தன்னைச் சுற்றியும், அதற்கு அப்பாலும் நடக்கும் பிரச்சினைகளில், இந்த கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதில் தேடும் ஆவலும், அந்த பதில்களை விரைந்து பெற்றிட வேண்டும் என்ற அவசரமும், புதிய புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்க அவனைத் தூண்டியது. அத்தகையதொரு அரிய கண்டுபிடிப்புதான், செய்திகளை முந்தித் தர...

அம்மா அவர்களுக்கு பாரத ரத்னா வழங்க பிரதமர்க்கு முதலமைச்சர் கடிதம்

படம்
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களுக்கு "பாரத ரத்னா" விருது வழங்க வலியுறுத்தி, மேதகு பிரதமர் அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு எம். ஜி.ஆர் பெயரை சூட்ட பிரதமர்க்கு முதலமைச்சர் கடிதம்

படம்
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி.ஆர் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என மேதகு பிரதமர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா வழங்க பிரதமர்க்கு முதலமைச்சர் கடிதம்

படம்
12th SEP 2018: முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி மேதகு பிரதமர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

படம்
மக்கள் அனைத்து நலன்களையும் பெற்று வாழ வேண்டும் - முதலமைச்சர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!