நியூஸ் ஜெ அறிமுக விழாவில் முதலமைச்சர் எடப்பாடி ஆற்றிய உரை:
சென்னை,
சென்னையில் நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் லோகா, இணையதளம் மற்றும் கைப்பேசி செயலியை அறிமுகம் செய்து வைத்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கழக அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் பாலமாக நியூஸ் ஜெ தொலைக்காட்சி அமையும் என தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நியூஸ் ஜெ. தொலைக்காட்சியின் லோகோ, இணையதளம் மற்றும் செயலி தொடக்க விழா நடைபெற்றது. கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் லோகோ மற்றும் கைப்பேசி செயலியை அறிமுகம் செய்து வைத்தனர். முன்னதாக நியூஸ் ஜெ தொலைகாட்சியின் மேலாண் இயக்குநர் சி.வி.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். விழாவில் கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
லோகோ, இணையதளம் மற்றும் கைப்பேசி செயலியை அறிமுகம் செய்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:–
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அரசு செயல்படுத்துகின்ற திட்டங்களை நாட்டு மக்களுக்குஎடுத்துச் செல்லுகின்ற பாலமாக இந்த தொலைக்காட்சி அமையும் என்று நாங்கள் கருதுகின்றோம். இன்றைக்குதமிழகத்திலே பல்வேறு தொலைக்காட்சிகள் இருந்தாலும், இதயதெய்வம் அம்மாவினுடைய அரசு போடுகின்ற திட்டங்களை முழுமையாக மக்களுக்கு கொண்டு செல்வது கிடையாது. இன்றைக்கு எல்லா கட்சிகளுமே தொலைக்காட்சி வைத்து நடத்திக் கொண்டிருக் கின்றன. இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இருக்கின்றபொழுது கழகத்தினுடைய தொண்டர்கள்,நிர்வாகிகள் துணையோடு ஒரு தொலைக்காட்சியை உருவாக்கினார்கள்.
ஆனால், இன்றையதினம் அந்தத் தொலைக்காட்சி யாரிடம் செல்லக்கூடாது என்று நினைத்தோமோ அவர்களிடத்திலே சென்று விட்டது. அதற்கு மாறாகத்தான் இந்த நியூஸ்-து தொலைக்காட்சியை இன்றைக்கு உருவாக்கியிருக்கிறார்கள். ஆகவே, இன்றைக்கு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவினுடைய அரசு போடுகின்ற திட்டங்கள்,மக்களுக்கு செய்கின்ற நன்மைகள் அத்தனையும் முழுமையாக மக்களுக்குச் சென்றடைவதற்காக இந்தத் தொலைக்காட்சி பேருதவி புரியும்
என்று நான் நம்புகின்றேன். அதுமட்டுமல்ல, இன்றைக்கு, நாட்டில் நடைபெறுகின்ற சம்பவங்களை மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கின்றது இந்த தொலைக்காட்சி மூலமாகத்தான்.
என்று நான் நம்புகின்றேன். அதுமட்டுமல்ல, இன்றைக்கு, நாட்டில் நடைபெறுகின்ற சம்பவங்களை மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கின்றது இந்த தொலைக்காட்சி மூலமாகத்தான்.
ஆகவே, அப்படிப்பட்ட நல்ல பல திட்டங்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டுமென்று சொன்னால்நம்முடைய இயக்கத் திற்கும் ஒரு தொலைக்காட்சி வேண்டும், அந்தக் குறையை இன்றையதினம் நியூஸ் ஜெ தொலைக்காட்சி போக்கியிருக் கின்றது.இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய, அம்மாவினுடைய அரசு நாட்டு மக்களுக்கு செய்கின்ற நல்ல பல திட்டங்களையும் அதோடு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கழகமும் நடத்துகின்ற பொதுக்கூட்டங்கள் எல்லாம் இன்றைக்கு ஊடகத்தின் வாயிலாக, தொலைக்காட்சியின் வாயிலாக நியூஸ் ஜெ தொலைக்காட்சி மூலமாக வெளிவரவிருக்கின்றது. அந்தக் குறையை இன்றைக்கு நிவர்த்தி செய்கின்றது என்பதை மகிழ்ச்சியோடு இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக் கின்றேன்.
பல்வேறு தொலைக்காட்சிகள் தமிழகத்திலே இருந்தாலும்கூட, அவற்றில் எல்லாம் நாம் செய்கின்ற திட்டங்களை ஒருமுறை தான் காண்பிப்பார்கள். ஆனால், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் ஒரு சிறு பிரச்சினையைச் சொன்னாலே அதை நாள்முழுவதும் மாற்றி, மாற்றி காட்டிக் கொண்டிருப்பார்கள். நாம் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், மக்களுக்கு நன்மை செய்தா லும் அதையெல்லாம் மக்களிடத்திலே சேர்ப்பது கடினம்.
ஏனென்று அவர்களைக் கேட்டால், விறு விறுப்பான செய்தி வேண்டுமென்று கேட்பார்கள். நாம் எப்படி ஆளும் கட்சியில் இருந்து விறு, விறுப்பான செய்தியை சொல்லமுடியும். மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய செய்தியைத்தான் நாம் சொல்ல முடியும். அந்தக் குறையைப் போக்குவதற்காக இன்றையதினம் நியூஸ் ஜெதொலைக்காட்சி நமக்கு கிடைக்கப் பெற்றிருக் கிறது. அதில் நாம் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மறைவிற்குப் பிறகு, அம்மாவினுடைய அரசுதொடர்ந்து பல்வேறு சாதனை களை புரிந்து வருகின்றது. இன்றைக்கு வேளாண்மைத் துறையிலே அகில இந்திய அளவிலே நாம் பரிசுகளை பெற்றுக் கொண்டிருக்கிறோம். அதேபோல, மருத்துவத் துறையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறோம். உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் இன்றைக்கு தொடர்ந்து நாம் இந்திய அளவிலே பரிசை பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.அதே போல, உள்ளாட்சித் துறையில்கூட, நேற்றையதினம் நமது உள்ளாட்சித் துறை அமைச்சர் 6 விருதுகளை பெற்று
வந்திருக்கிறார். இதையெல்லாம் ஒரு குறிப்பிட்ட அளவுதான் காட்டுகின்றார்கள்.
வந்திருக்கிறார். இதையெல்லாம் ஒரு குறிப்பிட்ட அளவுதான் காட்டுகின்றார்கள்.
அதோடு, உயர்கல்வித் துறையில் சாதனை படைத்திருக்கின்றோம். மின்சாரத் துறையில் சாதனை படைத்து அகில இந்திய அளவில் விருதுகளை பெற்றிருக்கின்றோம். போக்குவரத்துத் துறையில் சிறந்த நிர்வாக திறமைக்காக அகில இந்திய அளவில் பரிசுகளைப் பெற்றிருக்கின்றோம். அதேபோல, பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த காவேரி நதிநீர்ப் பிரச்சினையில் அம்மாவினுடைய அரசுதான் தீர்ப்பு பெற்றிருக்கிறது. அந்தத் தீர்ப்பை நாம் தான் பெற்றிருக்கின்றோம். ஆக, இப்படி, நல்ல பல திட்டங்களை, இன்றைக்கு அரசின் மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலமாக, அரசு செய்த சாதனையின் வாயிலாக, அகில இந்திய அளவில் பரிசுகள் கிடைக்கப்பெற்றிருக்கிறது.
அதையெல்லாம் குறுகிய நேரம் தான் தொலைக்காட்சியில் காட்டுகின்றனர். ஆனால், நமக்கென்று ஒரு தொலைக்காட்சி இருந்தால், அடிக்கடி காட்டி, மக்கள் மனதில் இடம்பெற்று, இன்றைக்கு அம்மாவினுடைய அரசு சிறந்த அரசு என்று மக்கள் பாராட்டுகின்ற அளவுக்கு பெயர் கிடைக்கும். அந்தப் பெயர் கிடைப்பதற்கு இன்றைக்கு நியூஸ் ஜெ தொலைக்காட்சி பேருதவியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இன்றைக்கு வந்திருக்கின்ற ஊடகங்களும், தொலைக்காட்சிகளும், இனி அரசு போடுகின்ற நல்ல பல திட்டங்களை, ஊடகங்கள் பாலமாக இருந்து மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டுமென்று இந்தத் தருணத்தில்கேட்டுக் கொண்டு, இந்த நியூஸ் ஜெ தொலைக்காட்சி அன்றாட செய்திகளை மக்களுக்கு வெளிப்படுத்தி, இன்றைக்கு தமிழகமே ஒரு சிறந்த மாநிலமாக விளங்குகின்றது.
இந்தியாவிற்கு ஒரு முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்ற ஒரு செய்தியை நாட்டு மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று இந்தத் தருணத்திலே கேட்டு, நியூஸ் ஜெ தொலைக்காட்சி மேலும், மேலும் வளர்ந்து மக்களுக்கு நல்ல பல செய்திகளை வழங்க வேண்டுமென்று வாழ்த்தி, வாழ்த்தி, வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக