இடுகைகள்

உஷா மரணம் காட்டுமிராண்டி தனமான காவலர் செயல்....

ஊடகத்திற்கு இன்று ரஜினியோ கமலோ கட்சி ஆரம்பிக்கவில்லை... உஷா மரணத்தை எடுத்துக்கொண்டது... ஒரு போலீசை தண்டித்தால் இது தீர்ந்து விடுமோ... என்ன செய்ய வேண்டும் என்று எதிர் கட்சி கூறியதா? ஆக்க பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட கருத்துக்கள் பரிமாறப்படுகின்றனவா? அவனை 302 பிரிவில் தண்டித்தால் மட்டும் தீர்வு கிட்டுமோ? என் இது நடந்தது? தலைக்கவசம் அணியாமல் சென்ற ஒருவனை பிடிக்க சென்ற போது நிறுத்தாத வண்டியை உதைத்ததாக கூறப்படும் ஒரு நிகழ்வு... ஒரு கர்ப்பிணி பெண் இறப்பு ஈடுசெய்ய முடியாததே... அதிலும் அந்த அதிகாரியின் செயலும் காட்டுமிராண்டி தனமானதே ஆனால் இன்று ஒரு தனிமனிதனுக்கு நடந்த ஒன்று நாளை நமக்கும் நடக்கலாம்... அப்ப இதற்கு தீர்வு வேண்டுமா இல்லை அந்த தனிமனிதனுக்கு தண்டனை வேண்டுமா?... நிரந்தர தீர்வை நோக்கி செல்ல கற்றுக்கொள்வோம் விவாவத்தை வைப்போம் ஆரோக்கியமான முறையில்... அரசின் செவி நோக்கி நம் பயணம் தொடரட்டும்.. #ADMK4ever

#HBDAMMA70

படம்

ஜெ எனும் சகாப்தம்...

படம்
69% இடஒதுக்கீடு வேண்டும் அம்மாவின் புகைப்படம் வேண்டாமோ... பெண்களின் முன்னேற்றத்திற்கு அறிய பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியவர் என்பதில் மாற்று கருத்து உண்டோ... தைரிய...

எப்படி திமுகவும் தினகரனும் ஒன்று?

1. குடும்ப அரசியல், 2. கொள்ளை கூட்டம், 3. அதிகார துஷ்பிரயோகம், 4. பண திமிர், இன்னும் பல... #ADMK4ever

தன் மொழி தானாய் வளரும்....

மானம் கெட்ட வந்தேறிகளா!!!! நியாபகம் இருக்கட்டும் நாங்கள் இல்லையேல் இந்தியா என்ற நாடு உலக அளவில் யாருக்கும் தெரிந்திருக்காது... ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என வந்தேறி இந்திய கடற்படையினர் கூறியதாக மீனவர்கள் வாயிலாக செவியில் வந்தது... இச்செய்தி உண்மை எனும் பட்சத்தில் மிகவும் கண்டிக்கத்தக்கது... படிப்போம் தமிழை(தாய் மொழியில்) கற்றுக் கொள்வோம் அனைத்து மொழியையும் முதலில் மதிப்போம் பிறரை பிற மொழியினரை.... தன் மொழி தானாய் வளரும்.... #ADMK4ever

குழந்தைகள் தினம்

Nov 14 நேரு மாமாவின் பிறந்தநாள்... குழந்தைகள் தினம்... ஐயா! நீவிர் எங்களுக்காக சிறை சென்ற செம்மல் என படித்திருக்கின்றேன்... அதே போல் நீங்கள் இன்னும் ஓரு விஷயம் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும், ஆம் ஐயா! உங்கள் குடும்ப நபர்கள் அரசியல்வாதிகள் ஆகாமல் தடுத்திருந்தால் இன்றும் காங்கிரஸ் ஆண்டுகொண்டிருக்கும் பிஜேபி என்ற ஒரு தீய சக்தி வந்திருக்காது... #ADMK4ever

சசிகலா ஒரு சதிகலா....

இங்கு ஜாதி மதம் பற்றி பேச கூடாது என்று இருந்தேன் பேச வைத்து விட்டார்கள்... இருப்பினும் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று கூறிவிட்டு விழைகிறேன்... அஇஅதிமுகவை தனது என்று சொல்லும் சசிகலாவின் பக்கம் ஒரு சிறு கூட்டம் இருக்கிறதே அது உண்மையான அம்மாவின் விசுவாசிகள் இல்லை... அது அம்மா இருக்கும் போது பொதுநலவாதி என்று கூறிக்கொண்டிருந்த கூட்டம் இன்று எதற்காக இப்படி மாஃபியா கூட்டத்திற்கு ஜால்ரா போடுகிறது என்பது என் முதல் வரியை படித்தால் புரியும்... அம்மாவின் அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் செய்து அதில் அம்மாவை சிக்க வைத்து நாடகம் ஆடிய கூட்டம் இன்று வியர்வையை ரத்தமாக சிந்தி உருவாக்கிய அஇஅதிமுகவுக்கு உரிமை கூறுகின்றது... அம்மாவுக்கு நாங்கள் தான் எல்லாமுமாக இருந்தோம் என்று சொல்லி கொண்டு வரவேண்டாம் இன்று உங்கள் சொத்துமதிப்பே கூறிவிடும் நீங்கள் ஏன் அம்மாவின் பின் இருந்தீர்கள் என்று.... ஜெயம் வரும் இரட்டை இலையோடு.... #ADMK4ever