இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தகுதியானவர் தலைமையேற்பார்அவர் தலைமையில் செயல்படுவோம்...

படம்
அன்புள்ள இரட்டை இலைக்காரனுக்கு, நம் கட்சியை யார் வழிநடத்த வேண்டும் என்பதில் உங்களுக்கும் எங்களுக்கும் வேறுபாடு உள்ளது உண்மை தான்.  நாங்கள் சில விஷயங்களை மனதில் வைத்து அண்ணன் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் நம் பெருமைமிகு அண்ணாதிமுகவை வழிநடத்த வேண்டுமென நினைக்கிறோம். நீங்களும் அவ்வாறு சிலவற்றை மனதிலிருத்தி, திரு. ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வரவேண்டுமென விரும்பலாம்.  யாரோ ஒருவர் நிச்சயமாக ஜெயிப்பர். இருவரில் ஒருவர் நிச்சயமாக தோற்பர். ஆனால் ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படுவதே நிர்வாகத்திற்கு உகந்தது என்பதில் உறுதியாய் அனைத்துத் தொண்டர்களும் இருக்கிறார்கள். இருக்கட்டும். தவறில்லை.  இந்த நிர்வாக ரீதியலான பிரச்சினை ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும் உறுதியாய். அன்றிலிருந்து மீண்டும் திமுகவை நோக்கி நம் இலக்கு பாயட்டும்.  முடிவு ஏற்படும் வரை நாங்களும் நீங்களும், எங்கள் கருத்தும் உங்கள் கருத்தும், மோதிக்கொள்ளட்டும். முடிவான பிறகு ஒருங்கிணைந்தே செயல்படுவோம் கழக இலக்கை நோக்கி.  இதில், நாம் வெற்றி பெற்று விட்டோம் என்கிற திமிரு வெற்றிபெற்ற தரப்புக்கும் தேவையி...

ஓ பன்னீர்செல்வம் செய்வது அண்ணாதிமுகவிற்கு செய்யும் பச்சைத் துரோகமாகும்!!!

படம்
அதிமுகவின் மொத்த பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை - 2665 இதுவரை (28 ஜூன் 2022) ஆதரவு, எடப்பாடியாருக்கு  - 2441 உறுப்பினர்கள் ஆதரவு OPS க்கு - 77 பேர் ஆதரவு இதுவரை முடிவு எடுக்காதவர்கள் - 147 அதாவது,  எடப்பாடியாருக்கு  -  92% OPS க்கு - 3% நடுநிலை - 5% இந்த 3% ஐ வைத்துக்கொண்டு 50% அதிகாரம் கேட்பது தான் அராஜகம். அட்டூழியம். தொண்டர்களுக்குச் செய்யும் துரோகம். தன்னை வளர்த்த கட்சிக்கு செய்யும் பச்சைத் துரோகம். தனக்கு தொண்டர்கள் ஆதரவில்லை என்று தெரிந்தும், தன்னைத் தொண்டர்கள் விரும்பவில்லை எனத் தெரிந்தும், ஜானகி அம்மையார் போல் பெருந்தன்மையாக விலகிக் கொள்ளாமல்,   ஓபிஎஸ் அவர்கள் கட்சியின் செயல்பாட்டை, கட்சியின் மீதான இமேஜை, சிதைக்கும் விதமாக, கோர்ட், தேர்தல் ஆணையம் என செல்வது, 25 வருடம் MLA, 15 வருடம் அமைச்சர், 3 முறை முதல்வர் பதவி கொடுத்து அழகு பார்த்த அண்ணாதிமுகவிற்கு செய்யும் பச்சைத் துரோகமாகும்.

இது வன்முறை வெறியாட்டமா??

படம்
இது வன்முறை வெறியாட்டமா?🔥 தலைமை கழகத்தில் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேனரை கிழித்தது வன்முறை என்கிறார்கள். மறுப்பதற்கில்லை, ஆனால், 4 ஆண்டுகள் துணைமுதல்வராக இருந்த போது தொண்டர்களை கண்ணுக்கு தெரியவில்லை,  5 ஆண்டுகள் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கும்போது தொண்டர்களை கண்ணுக்குத் தெரியவில்லை. தொண்டை வற்றி பேச முடியாமல் கஷ்டப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி,  சொந்த மாவட்டத்தை விட்டு வெளியேறாமல் இருந்த போது, தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டர்களை கண்ணுக்குத் தெரியவில்லை. பதவி பறி போகிறது என்று தெரிந்ததும் தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என எப்படி பேச முடிகிறது ?  தர்மயுத்தம் நடத்தினால் அதற்கும் தொண்டர்கள் வரவேண்டும், சசிகலாவை ஆதரிக்க வேண்டும் என்றால் அதற்கும் தொண்டர்கள் வரவேண்டும்,  டெல்லியின் அடிமையாக தன் மகன் இருப்பான் அதற்கும் தொண்டர்கள் முட்டுக் கொடுக்க வேண்டும்,  திமுக அரசுக்கு பாராட்டினால் அதற்கும் தொண்டர்கள் முட்டுக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் சாத்தியம்?  இத்தனை ஆண்டுகள் பொ...