தற்போதைய அரசியல் களம் யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம்???
தற்போதைய அரசியல் களம் யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம்???
திமுகவுக்கு இன்றும் சாதகமாகவே தமிழக அரசியல் களம் இருக்கிறது என்பதே உண்மை. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு முன் இருந்ததை விட தற்போது அவர்கள் செல்வாக்கு குறைந்து விட்டது என்பதும் அதை அதிமுக அறுவடை செய்ய தொடங்கிவிட்டது என்பதும் நிதர்சனம்.
மக்கள் மத்தியில் இவ்வளவு அதிருப்தி இருக்கும் போதும் எப்படி இன்னும் திமுகவுக்கு சாதகமான களம் என்று என கேள்வி எழலாம்.
ஊடகம், ஊடகவியாளர்கள், போலி போராளிகள், சினி பிரபலங்கள், அரசியல் வியாபாரிகள், திமுகவால் நேரடியாக பலநடைவோர் மற்றும் அப்பாவி முரட்டு திமுகவினர் சிலரால் இந்த ஆட்சி ஓடிக் கொண்டுள்ளது என்பதே உண்மை.
மேலும் பாஜக வின் அண்ணாமலை செய்யும் சிறுபிள்ளை அரசியல், மேலும் பாஜக செய்யும் மத அரசியலுக்கு எதிரான சிறுபான்மை மக்கள் ஆதரவோடு இந்த ஒன்றுக்கும் உதவாத அரசு ஒராண்டை நிறைவு செய்துள்ளது. உண்மையில் பாஜகவுடன் திமுக கள்ள உறவுடன் இருந்து கொண்டு தமிழர் உரிமைகளை காதும் காதும் வைத்தார் போல் காவு வாங்கி கொண்டுள்ளது, இவர்கள் கொண்டு வந்துவிட்டு பிற்காலங்களில் அதை இவர்களே எதிர்த்து அரசியல் செய்வார்கள் அப்போது தான் நமக்கே தெரியும் என்பது நீட், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட் ஆலை திறப்பு கொடுக்கும் உதாரணங்கள்.
இவர்களுக்கு ஆட்சியில் இருந்து கொண்டு சம்பாதிக்க வேண்டும், மக்கள் பற்றி எல்லாம் இவர்கள் ஒருபோதும் கண்டு கொண்டதாக சரித்திரம் கிடையாது, தன் குடும்ப மக்களை பற்றி வேண்டுமானால் கவலைப் படுவார்கள்.
அதிமுக அமைதியாக இருக்கிறது பாஜக குற்றம் சாட்டுகிறது, உண்மையில் அப்படிதானா? ஆம் அப்படி தான் ஆனால் இவர்கள் சொல்வது போல் இல்லை. பாஜக எதை ஆதரிக்கிறதோ அதை அதிமுக ஆதரிக்க வில்லை என்பது தான் இவர்கள் குற்றச்சாட்டு. பாஜக மதம் சார்ந்த பிரச்சனைகளை மட்டுமே தன் அரசியலாக கருதுகிறது. அதை அதிமுக ஆதரிக்கவில்லை என்றவுடன் இப்படி சொல்கிறது.
என்றென்றும் அதிமுக தான்
பதிலளிநீக்கு