தீயசக்தி திமுகவை எதிர்க்கும் திராணி எடப்பாடியாருக்கு மட்டுமே
என் கனவு அரசியல் செய்ய வேண்டும் என்பது தான். சிறு வயதிலேயே அம்மாவை பார்த்து இதை என் மனதில் ஏற்றி கொண்டவன் நான்.
ஆனால் இதை எங்கள் வீட்டில் சொல்ல முடியாது, செயல்படுத்தவும் முடியாது. ஏனென்றால் எங்கள் குடும்பம் அரசியல் குடும்பம் இல்லை.
அப்போது "social media" வளர்ந்து வந்த காலம் அப்போது தான் நான் twitter தளத்தில் அரசியல் பேச ஆரம்பித்தேன். அந்த நாள் வரை என்னுள் இருந்த அரசியல்வாதி வெளியே வர ஆரம்பித்தான். அன்று முதல் கழகத்திற்கு விஸ்வாசமாக பதிவுகளை பதிவிட்டு வருவதாக நினைக்கிறேன்.
அதற்கு அங்கீகாரம் தரும் வகையில் என்னை ஐயாயிரதிற்கும் மேற்பட்டோர் பின் தொடர்வதாக நினைக்கிறேன். அம்மாவின் இறப்புக்கு பிறகு சிறிது காலம் என் அரசியல் பேச முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணம் தோன்றியது.
![]() |
எடப்பாடி கே பழனிசாமி அண்ணாவிற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு |
ஆனால் ஓ. பி. எஸ் அவர்கள் வெளியேறி போர்க்கொடி தூக்கிய நிலையில் அவரால் ஈர்க்கப்பட்டு அவருக்காக செயல்பட்டேன். பின் அவரின் செயல்பாட்டில் ஏற்ப்பட்ட சிறு சந்தேகத்தால் மீண்டும் அரசியல் பேசுவதில் இருந்து விலக நேரிடுமோ என்ற எண்ணம் தோன்றியது. ( சுட்டு போட்டாலும் திமுகவுக்கு சொம்பு தூக்கும் நிலை என்னுள் ஒரு போதும் தோன்றாது என்பதால்.)
ஆனால் #எடப்பாடியார் என் அரசியலில் நம்பிக்கையூட்டும் விதமாக மாசாக செயல்பட்டார். அவரில் நம் அம்மாவை கண்டேன். தீய சக்தி திமுகவை எதிர்க்கும் திராணி இவரிடம் மட்டுமே இருப்பதாக நான் முழுமையாக நம்புகிறேன். இவர் அரசியல் சாணக்கியன்!!! கட்டாயம் இவரை குறைத்து மதிப்பிடுவோர் தோற்று போவது உறுதி. இதை வரும் காலம் உணர்த்தும். ( முற்றும்)
- என்றும் அதிமுக தொண்டன்
For contact us:
https://twitter.com/admkforever
https://facebook.com/admkforever
https://Instagram.com/admkforever
கருத்துகள்
கருத்துரையிடுக