சென்னை அசோக்நகரில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை...
சென்னை அசோக்நகரில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை...
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தெய்வத்துக்கு நிகரானவர்; மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர். மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்கி வருகிறது அதிமுக அரசு. மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது; திமுக ஆட்சியில் இந்த அளவுக்கு மருத்துவம் கிடைத்ததா?.
சென்னையில் மேயராக இருந்த ஸ்டாலின், மக்களின் தேவைக்கு எதுவும் செய்யவில்லை; திமுக ஒரு குடும்பக்கட்சி, கார்ப்பரேட் கம்பெனி!
இன்று கட்சி தொடங்குபவர்கள் கூட எம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் கட்சியே தொடங்க முடியும் என்ற நிலை ஆகிவிட்டது.
மற்ற கட்சிகள் குடும்ப வாரிசுகளை வளர்க்கின்றனர். ஆனால் எம்ஜிஆர் தொண்டர்களையே வாரிசுக தேளாக வளர்த்தவர். ஆலமரம் போல பரந்து விரிந்து, அதிமுக நன்மையையே வழங்கி வருகிறது.
மேயராக ஸ்டாலின் இருக்கும் போது ஒரு திட்டமும் கொண்டுவரவில்லை.
மேயராக ஸ்டாலின் இருக்கும் போது தூங்கி கொண்டிருந்தாரா..?
நீட் தேர்வை கொண்டுவந்த திமுகவால், தேர்வை ரத்து செய்ய முடியுமா?; மக்கள் உணர்வை புரிந்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கினோம்!
திமுக தலைவர் ஸ்டாலின் என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா?
சென்னையில் விலை உயர்ந்த நிலங்களை கண்டறிந்து பட்டா போட்டுக்கொண்டவர்கள் திமுகவினர் .
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இருந்ததில்லை; திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும்.
தமிழகத்தில் வீடு இல்லாதவர்கள் இல்லை என்ற நிலையை அதிமுக அரசு உருவாக்கும்.
தேர்தல் நெருங்குவதால் பொய் செய்திகள் மூலம் மக்களிடம் அனுதாபம் பெற ஸ்டாலின் முயற்சி செய்கிறார்.
கிளைக்கழக செயலாளராக இருந்து படிப்படியாக உயர்ந்து இன்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வந்துள்ளேன். ஸ்டாலினால் என்னை மட்டுமல்ல என் கட்சி தொண்டர்களை கூட அசைக்க முடியாது.
ஸ்டாலின் எப்போதும் கனவு மட்டுமே காண முடியும்.
- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கருத்துகள்
கருத்துரையிடுக