உண்மை பெண்ணியம்

ஒருவரை எப்படி வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக பயன்படுத்துவது குற்றமோ...
அதை விட பெருங்குற்றம் அதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட கால சலுகைகளை அனுபவித்து பின் அவரை அவதூறு கூறுவதும்...
உண்மையில் நீ தூய்மையானவர் என்றால் எப்போது பாலியல் துன்புறுத்தல்கள்/பரிமாற்றங்கள் நடக்கிறதோ அப்போதே வெளிக்கொணர்வது...
ஒரு பிரபல இயக்குனர் தவறு செய்தார் என்பதை ஒரு நடிகைக்கு வெளியில் கூற 10 ஆண்டுகள் தேவைப்படுகிறது என்றால். அதில் ஒரு போலித்தனம் தெரிகிறதே. மேலும் இதில் பெரும்பாலும் புகழின் உச்சிக்கு சென்றவர்கள் இவ்வாறு என் வாழ்க்கையிலும் நடந்தது ஆனால் அதை ஒப்புக்கொள்ள வில்லை. பின் என் சொந்த உழைப்பில் வளர்த்தேன் என்பதும், தோல்வியுற்றோர் அந்த பிரபல நடிகர் அல்லது இயக்குனர் அல்லது தயாரிப்பாளர் என்ற பெயரை குறிப்பிட்டு கூறுவது ஒரு வாடிக்கை ஆகிவிட்டது...
மாதர்சங்கங்கள் இருப்பது பிரபலமானவற்றை மட்டும் குரல் கொடுக்கும் வெத்து சங்கம். பெண்கள் ஆணுக்கு நிகராக தண்ணி அடிப்பதும் புகை பிடிப்பதும் அரைகுறை ஆடை அணிவதுமே பெண் சுதந்திரம் என தவறான போதனை செய்யப்படுகின்றது...
பெண் அரைகுறை ஆடைகளை அணிவதும் அலங்கார பொம்பை போன்று இந்த சமுதாயத்தில் திரிவதும் தன்னை இந்த உலகம் பார்த்து காமவெள்ளத்தில் திகைக்க வைப்பதும் என ஆணாதிக்க பெண்களின் ஆதரவாளன் என்ற போர்வையில் தவறான பாடம் புகட்டி வியாபார பொருளாக்குகிறான். அதற்கு இந்த பெண்கள் பலியாக்க படுவதே அரங்கேறிவருக்கிறது...
இவ்வாறு சொன்னால் நான் குற்றவாளியாக்கப்படுவேன்...
யார் பெண்ணியவாதிகள் என்றால் ஆண்களுக்கு நிகராக ஆக்கபூர்வமாக வளர்வதே...
ஒரு சானியா போன்றோ PV சிந்து போன்றோ கல்பனா சாவ்லா போன்றோ வாழ்ந்து காட்டுவதே உண்மையான பெண்ணியம்...
ஒரு வீட்டில் நீ தலைவியாக மாறுவதும் பெண்ணியமே...
தன் காலில் நிற்கும் அனைத்து பெண்களும் பெண்ணியவாதிகளே...
என் வீட்டு பெண்கள் சமையலறையில் மட்டுமே இருக்கவேண்டும் ஆனால் அடுத்தவன் வீட்டு பெண்கள் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்ணிய(வாதிகளே) போலிகளே அதிகம்...
எப்படி ஒரு பெண் வளர்க்கப்பட வேண்டும் என்பதே மிக பெரிய கேள்வி? ஏன் என்றால் இந்த உலகத்தில் எங்குமே பெண்ணை ஒரு போதை பொருளாகவும் காமபொருளாகவும் குழந்தை பெற்றெடுக்கும் ஒரு இயந்திரமாகவும் பார்ப்பவர்களே அதிகம்...
போலி பெண்ணியம் பேசுவோர் பெண்ணை ஒரு காமபொருளாக்குகின்றனர், ஆண்களில் இருவரில் ஒருவர் போதை பொருளாக்குகின்றனர், அனைவருமே பெற்றெடுக்கும் இயந்திர பொருளாக்குகின்றனர்...
உண்மை பெண்ணியம் என்பது என்ன என்பதை கூடி பேசி முடிவெடுப்போம், நாளைய பாரதி கண்ட பெண் வளர்ப்போம்... #ADMK4ever

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜெ எனும் சகாப்தம்...

தலித் தம்பிகளே தங்கைகளே அண்ணங்களே அக்காகளே....

சசிகலா, இனி என்ன செய்ய முடியும்?