OPS Vs SasikalaNatarajan
ஓரு பெண் அரசியலில் நிலைப்பது கடினம்... #சசிகலாநடஜான் இவ்வாறான வார்த்தையை பயன் படுத்தி அனுதாபத்தை தேட பார்க்கும் சசிகலா, துணைக்கு ஜெவை அழைத்தது தான் உச்சம். பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை ஆனால் அது எந்த வழியில் என்பதே கேள்வி. அரசியலில் வாரிசு என்பது இருக்க கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து, அது மகனாகவோ மகளாகவோ சொந்தமாகவோ நண்பனாகவோ இருந்தது மட்டுமே ஜெவுக்கு அடுத்தது சசிதான் என்பதையே எதிர்க்கின்றோம். சசி முதலில் அடிப்படை உறுப்பினர் ஆகுங்கள், படிப்படியாக முன்னேறுங்கள் அப்போது வந்து எங்களிடம் ஆதரவு கோருங்கள் பரிசீலனை செய்யலாம். குறைந்தப்பட்சம் ஒரு தேர்தலையாவது சந்தித்து விட்டு வந்திருக்கலாமே! கட்சியில் உழைத்தால் விசுவாசமாக இருந்தால் எந்த இடத்தையும் அடையலாம் என்ற எண்ணம் வரும் போதே மக்களுக்கான அரசியல் மேலோங்கும்.... #ADMK4ever #OPS #SasikalaNatarajan #ADMK