இடுகைகள்

ஆகஸ்ட், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மக்கள் முதல்வர்....

யாரும் ஜாம்பவான்களாக பிறப்பதில்லை... இன்றைய எடப்பாடி நாளை பெரும் தலைவர் ஆகலாம். எல்லாம் காலமும் இவரின் செயலுமே உறுதிசெய்யும். ஆனால் யாரையும் குறைத்து மதிப்பிடும் ஒரு கூத்தாடிக்கு தெரியவில்லை தானும் ஒரு பரட்டையாக  இருந்து இன்று சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறோம் என்று... ஆனால் இவர்கள் EPS OPS யாரும் தன்னை எம்.ஜி.ஆர் என்றோ ஜெயலலிதா என்றோ சொல்லிக்கொள்ளவும் இல்லை சொல்லவும் மாட்டார்கள்... என்னை பொறுத்தவரை இவர் ஒரு எடப்பாடி என்று மக்கள் சொல்லுவது போல் வாழ்ந்து காட்டினாலே போதும்... மேலும் சிலர் இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரா என கேட்கும் ஒரு சில அறிவு ஜீவிகளுக்கு ஒரு பதில் முதல்வர் பதவி என்பது சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தெடுக்கும் பதவி. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்தவரே எடப்பாடி என்பதும் அஇஅதிமுகவால் 9 முறை சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். #ADMK4ever

போராட்டம் நியாயமான முறையில் இருக்கின்றதா?

எப்படியும் வாழ்ந்து காட்டாமல், இதிலும் மருத்துவ படிப்பிற்கு படிக்க நினைத்து, கேவலம் தற்கொலை செய்து கொண்ட  அனிதாவிற்கு ஆதரவு தெரிவித்து போராடிய கூட்டம், தவறான சிகிச்சை செய்த அரசு மருத்துவர்களுக்கு எதிராக போராடும் கூட்டம், சுக பிரசவம் வீட்டிலேயே செய்ய வேண்டும் என்று கூறி ஒரு உயிர் மரணித்த பின் நடவடிக்கை எடுத்த அரசுக்கு எதிராக போராடும் தங்களின் கூற்று என்ன என்று புரியவில்லை.... உண்மையில் அக்கரையில் போடராடுகிறீர்களா இல்லை எப்படியும் அரசுக்கு எதிராக பேச வேண்டும் என்று முடிவு செய்து விட்டு செயல்படக்கினீர்களா....!? #ADMK4ever