இது தான் விடியலா???
10 ஆண்டு செய்யாததை ஒரே ஆண்டில் செய்தாரா ஸ்டாலின்???
வெறும் பத்து மாத குழந்தை தான் இந்த அரசு, இதை ஏன் விமர்சிக்கிறார்கள் என்று கேட்டவர்கள் இப்போது 10 ஆண்டு செய்யாததை ஒரே ஆண்டில் கிழித்ததாக சொல்வது நம்மை மட்டுமல்ல அவர்களை அவர்களே ஏமாற்றி கொள்கின்றனர் என்பதே நிதர்சனம்.
தாலிக்கு தங்கம் திட்டம் தொடங்கி, மினி கிளினிக் தொடங்கி, இலவச லேப்டாப் தொடங்கி, இன்னும் பல மக்கள் நலத் திட்டங்களை முடக்கிய அரசு எப்படி இதை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.
தேர்தல் அறிக்கையில் சொன்னது ஒன்று செய்தது அதற்கு நேர் எதிர். தாலிக்கு தங்கம் திட்டத்தில் 25000 ஊக்கத்தொகை 50000 ஆக உயர்த்தப்படும் என்றார்கள், தற்போது அந்த திட்டத்தையே முடக்கிவிட்டனர். இது தான் விடியலா????
தேர்தல் அறிக்கையில் செய்ய முடியாத பழைய ஓய்ஊதிய திட்டம் கொண்டுவரப்படும் என்றனர், இப்போது அது சாத்தியம் இல்லை என்கிறார் நிதி அமைச்சர். இது தான் விடியல????
எடப்பாடி அரசு 2000 மினி கிளினிக் கொண்டுவரும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதை சரியாக தொடர்ந்து செயல் படுத்தி இருந்தால், இப்போது கிராமப்புற மக்கள் எதற்கெடுத்தாலும் அருகில் இருக்கும் மெடிக்கலில் மாத்திரை வாங்கி தின்று உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளும் போக்கு வெகுவாக குறைந்து இருக்கும். மேலும் 2000 டாக்டர்கள், 2000 செவிலியர்கள் & 2000 தூய்மைப் பணியாளர்களுக்கு வேலை கிடைத்திருக்கும். இது தான் விடியலா????
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ரவுடிகளையும் திமுகவையும் பிரிக்கவே முடியாது. இப்போது சட்டத்தின் ஆட்சி நடப்பதாக தெரியவில்லை. எங்கும் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு என்று திமுக நிர்வாகிகள், கவுன்சிலர்கள் செய்யும் அட்டகாசத்தை ஒடுக்கும் திராணி இந்த அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை. இது தான் விடியலா????
காவல் துறை இப்போது ஏவல் துறை ஆகிவிட்டது. மேலும் லாக்கப் மரணங்கள் அதிகரித்து விட்டது. ஸ்டாலின் எதிர் கட்சியாக இருக்கும் போது லாக்கப் மரணத்துக்கு எதிராக எடப்பாடியாரை பதவி விலகச் சொல்லி போராட்டமெல்லாம் செய்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் விசாரணை கைதி லாக்கப் மரணம் மட்டுமே எடப்பாடி ஆட்சியில் நான்கு வருட ஆட்சியில் நடந்ததை விட அதிகம் என்பது கூடுதல் தகவல். இது தான் விடியலா????
ஆன்லைன் ரம்மி போன்ற உயிரை கொல்லும் விளையாட்டை எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கடந்த ஆட்சியில் தடை விதித்து சட்டம் இயற்றினார். ஆனால் அதை எதிர்த்து அவர்கள் தொடுத்த வழக்கில் தற்போதைய விடியா அரசு ஒழுங்காக வாதாடாமல் அதற்கு மேல்முறையீடு செய்யாமல் இருக்கும் இந்த அரசால் தினம் தினம் ஒரு உயிர் மட்டுமல்லாது பல்லாயிரம் கணக்கான இளைஞர் வாழ்க்கை படுகுழியில் தள்ளப்படுகின்றனர். இதை பொருட்படுத்தாத அரசு தான் விடியல் அரசா????
நீட் தேர்வை ரத்து செய்வோம். அதை ரத்து செய்யும் இரகசியம் தெரியும், அந்த இரகசியம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செயல் படுத்தப்படும் என்று முழு பூசணியை சோற்றில் மறைத்த ஸ்டாலின் குடும்பம். ஆண்டு ஒன்றாகியும் இன்னும் அதிமுக எப்படி மசோதா போட்டதோ அதையே திமுகவும் திருப்ப செய்துக் கொண்டுள்ளது. இதை திசை திருப்ப அல்லக்கைகளை வைத்து நாடகம் போட்டுக் கொண்டுள்ளது. இது தான் விடியலா????

கருத்துகள்
கருத்துரையிடுக