தமிழ்நாட்டை சிறப்பித்த எடப்பாடியார்!!
தமிழ்நாட்டை சிறப்பித்த எடப்பாடியார்!!
1. தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை சிறப்பித்து கொண்டாடப்படும் "தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு இனிவரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறைப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
2. தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் பெண் தலைவரின் படமாக, ஜெயலலிதா படம் திறப்பு.
3. மறைந்த முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியாரின் உருவப் படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைத்தார்,
4. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் முழு உருவப்படம் மற்றும் மோகன் குமாரமங்கலத்திற்கும் பெருமைசேர்க்கும் விதமாக சட்டமன்றத்தில் அவரது முழு உருவப்படமும் வைக்கப்படும் என உறுதி.
5. சேலத்தில் குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான ஈரடுக்கு மேம்பாலத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டுள்ளது.
6. சேலத்தில் ஏவிஆர் ரவுண்டானா மேம்பாலத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
7. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டுள்ளது.
8. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
9. சென்ட்ரல் மெட்ரோ நிலையம் புரட்சி தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
10. புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ புரட்சி தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா கோயம்பேடு என மாற்றப்பட்டுள்ளது.
11. நாகப்பட்டினத்தில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீள்வளப் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
12. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை, 'புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம்' என்று பெயர் மாற்றியுள்ளது. ஆங்கிலத்தில், 'Puratchi Thalaivar Dr. MGR Central Railway station' என்றும், தமிழில், 'புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
13. தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் திருச்செந்தூா் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டினத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் செலவில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 60 சென்ட் நிலத்தில் மணிமண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
14. சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, மொத்தம் 24 ஆயிரம் சதுர அடி நிலத்தில் 2 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவில் சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ளது.
15. சமூக நீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திர போராட்ட வீரருமான மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்பில் அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மண்டபத்தின் உள்ளே அவரது 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
16. மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு அருகில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ரூ.58 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. நினைவிடம் அருகில் அருங்காட்சியகம், அறிவுசார் மையம் அமைந்துள்ளது. ‘பீனிக்ஸ்’ பறவை வடிவம் 15 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் இறக்கை மட்டும் 2 பக்கமும் 21 மீட்டர் நீளம் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
17. 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா நிலையத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.67.9 கோடியை நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்துள்ளது. இழப்பீட்டு தொகையை செலுத்தி போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கூறி உள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக