Director Bharathiraja supports Jaya

சென்னை: ராஜீவ் காந்தி கொலைக்கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒட்டு மொத்த தமிழர்களும் உறுதுணையாக நிற்பார்கள்’ என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்பட 7 பேரின் விடுதலை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகம் சார்பில், சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய பாரதிராஜா, "உலக நாடுகள் அனைத்தும் தூக்குத் தண்டனையை எதிர்க்கும் சூழ்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சதாசிவம் மிக சரியான தீர்ப்பை சொல்லி இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது மாநில அரசின் முடிவு என்று அவர் தீர்ப்பு கூறியதும் முதல்வர் ஜெயலலிதா தாய்மை உணர்வுடன் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேர் உள்பட சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இதற்காக உலக தமிழர்கள் அத்தனைபேரும், கண்ணீரால் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மறப்பதும், மன்னிப்பதும் மனித மாண்பு. முதல் முறையாக தமிழன் தலை நிமிர்ந்து நிற்பதற்கான ஒரு முடிவை முதல்வர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார். இதற்காக ஒட்டு மொத்த தமிழர்களும் அவருக்கு உறுதுணையாக நிற்பார்கள்" என்றார்.

நடிகர் சத்யராஜ் பேசும்போது, "தலைமை பதவியில் இருப்பவர்கள் வீரமும், விவேகமும் உள்ளவராக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வீரமும் விவேகமும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. இதற்காக தமிழ் திரையுலகம் முழு மூச்சாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நிற்கும்" என்றார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜயின் அரசியல் பிடித்து விஜய்க்கு வாக்களிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால் நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்க மாட்டேன், ஆனால் நீங்கள் அப்படியில்லையே!

Ministers of MGR's Assembly: Rare Pics